இங்குதான் இருக்கிறார் நித்தியானந்தா! சென்னை ஹைகோர்ட்டில் தமிழக அரசு தகவல்! அப்போ கைலாசா?
டெல்லி: நித்யானந்தா கைலாசா என்ற நாட்டில் இருப்பதாக தகவல்கள் கிடைத்த நிலையில் அவர் தற்போது எங்கே இருக்கிறார் என்பது குறித்து தமிழக அரசு, நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகம் கர்நாடகாவின் பல்வேறு மாநிலங்களிலும் மடங்களை தொடங்கி செல்வ செழிப்புடன் இருந்தவர் நித்தியானந்தா. இவர் பாலியல் புகாரில் சிக்கியதன் மூலம் அறியப்பட்டார்.
மற்ற மடங்களின் சொத்துகளை அபகரிப்பது, பாலியல் புகாரில் சிக்குவது என அடுக்கடுக்கான புகார்கள் எழுந்ததை அடுத்து நித்தியானந்தாவை தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் அவர் தேடப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுவிடுவோமோ என அஞ்சிய நித்யானந்தா திடீரென நாட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகிவிட்டார். இந்த நிலையில்தான் அவர் தனியாக நாடு ஒன்றை உருவாக்கி, அதற்கு கைலாசா என பெயரிட்டதாகவும் அறிவித்தார்.
அவ்வப்போது இணையதளங்களில் வீடியோ மூலம் நித்தியானந்தா தோன்றி சத்சங்கங்களை நிகழ்த்தி வந்தார். இந்த நாட்டிற்கான கரன்சியை உருவாக்கினார். அது போல் பாஸ்போர்ட், கொடி உள்ளிட்டவைகளையும் அவர் உருவாக்கியிருந்தார்.
அது போல் தங்கள் நாட்டிற்கு வாணிபம் செய்ய தமிழகத்தின் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அப்படியும் மதுரையில் பரோட்டா கடை நடத்தி வந்தவர், விண்ணப்பித்திருந்தார். எனினும் கைலாசா எங்கிருக்கிறது என தெரியாமல் இருந்தது.
இந்த நிலையில்தான் குருபூர்ணிமா தினத்தில் கைலாசா எங்கு உள்ளது என்பதை அறிவிப்பேன் என நித்தி தெரிவித்திருந்தார். மேலும் தனது நாட்டில் அனைவருக்கும் சமமான கல்வி, மருத்துவம் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில்தான் ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, கரீபியன் தீவு, பசிபிக், தென் அமெரிக்கா உள்ளிட்ட 7 இடங்களில் கைலாசாவுக்கு சொந்தமான இடங்கள் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
கைலாசா எந்த நாட்டில் இருக்கிறது என்பதை நேரடியாக சொல்லாமல் நித்தியானந்தா குழப்பியதுபோல் தெரிவித்திருந்தார். மேலும் சில இடங்களையும் வருங்காலத்தில் அறிவிப்பேன் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கின் மூலம் நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்ற தகவல் தெரியவந்துள்ளது. அதாவது நித்தியானந்தாவின் மடங்களுக்கு தக்கார் ஒருவரை தமிழக அரசு நியமித்துள்ளதை எதிர்த்து சென்னை ஹைகோர்ட்டில் நித்தியானந்தா வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு தன் வாதத்தில், நித்தியானந்தா இந்தியாவில் இல்லை. இந்தியாவில் இல்லாத ஒருவர் எப்படி வழக்குத் தொடர முடியும்? அவர் தென் அமெரிக்காவில் ஈக்குவடாரில் வசித்து வருகிறார் என தெரிவித்துள்ளது.
எனவே நித்தியானந்தா ஈக்குவடாரில் இருக்கிறார் என்றால் கைலாசா என்ற நாட்டின் பெயரை திசை திருப்ப பயன்படுத்தினாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை நித்தியானந்தாவின் இடம் தெரியவந்துவிட்டதால் இனி அவர் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications