இறக்குமதி குடைக்குதான் 20% வரி! ஆனால் உள்நாட்டு குடை விலையும் உயர வாய்ப்பு! ஏன் தெரியுமா?
டெல்லி: இறக்குமதி செய்யும் குடைகளுக்குத்தான் 20 சதவீதம் வரி அதிகரித்துள்ளது. ஆனால் இந்தியாவிலும் குடைகளின் விலை உயரும்.
Recommended Video
2022- 2023 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குடைகளுக்கான இறக்குமதி வரியை 20 சதவீதம் உயர்த்தியுள்ளார். வைரம் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை, அதாவது பணக்காரர்கள் பயன்படுத்தும் பொருட்களின் விலையை குறைத்துவிட்டு ஏழைகள் பயன்படுத்தும் குடைக்கான விலையை அதிகரிப்பதா என ட்விட்டரில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதில் இருவேறு கருத்துகள் உலவுகின்றன. ஒன்று குடைகளுக்கான இறக்குமதி வரி உயர்வால் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு லாபம் கிடைக்கும் என்கிறார்கள். இன்னொன்று குடைகளுக்கான உதிரிபாகங்களை வெளிநாட்டிலிருந்து வாங்கவேண்டும் என்பதால் உள்நாட்டில் தயாரிக்கும் குடைகளின் விலையும் உயரக் கூடும் என்கிறார்கள்.

1.20 கோடி
இந்திய உள்நாட்டு உற்பத்தியில் தொழிற்சாலையில் குடைகள் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் உள்நாட்டு குடைகளுக்கு விலை உயர்வை எப்படி ஏற்படுத்தும் என்பதையும் பார்ப்போம். இந்தியாவில் குடைகளின் சந்தை மதிப்பு ரூ 2,000 கோடியாகும். கொரோனா காலகட்டத்திற்கு முன்னர் ஆண்டுக்கு இந்தியாவில் 1.20 கோடி குடைகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

சீன மார்க்கெட்
கேரளாவில் ஜான் மற்றும் பாப்பிஸ் ஆகிய குடைகள் நிறுவனங்கள் ரூ 700 கோடிக்கு விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. உள்நாட்டில் குடை தயாரிப்பாளர்கள் அரசின் வரி உயர்வையும் வரி விலக்கையும் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து சாகர் சன்ஸ் நிறுவனரும் அனைத்து இந்திய குடைகள் சங்கத்தின் செயலாளருமான ராஜேஷ் சோப்ரா கூறுகையில் சீன மார்க்கெட்டுகளில் கிடைக்கப்படும் விலை குறைந்த குடைகளால் இந்தியாவில் குடை விற்பனை அதள பாதாளத்தில் உள்ளது. எனவே இறக்குமதி வரி உயர்வின் மூலம் உள்நாட்டு குடைகள் உற்பத்தி வளர்ச்சி அடையும்.

10 சதவீதத்திலிருந்து 20 சதவீதம்
ஏற்கெனவே 10 சதவீதமாக இருந்த இறக்குமரி வரி உயர்வு தற்போது 20 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதை நாங்கள் வரவேற்று நிதியமைச்சருக்கு நன்றி கூறுகிறோம். குடைகள் விற்பனையாகும் சீசன்களின் போது லாக்டவுன்கள் அறிவிக்கப்பட்டதால் குடை உற்பத்தி தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் குடை தயாரிக்கவும் விற்பனையும் செய்ய முடியாத நிலை இருந்தது. இதனால் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட குடைகள் நன்கு விற்பனையாகின. இதனால் இந்திய குடைகள் விற்பனை மந்தமானது என்றார்.

கொரோனா இரண்டாவது அலை
அது போல் கேரளாவை சேர்ந்த பாப்பி குடைகள் நிறுவனத்தை நடத்தி வரும் டேவிஸ் தய்யில் கூறுகையில் கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாவது அலைகளால் முக்கியமான கோடை மற்றும் மழை காலங்களை இழந்துவிட்டோம். கொரோனாவுக்கு முன்னர் எங்கள் நிறுவனத்தின் விற்பனை ரூ 100 கோடியாக இருந்த நிலையில் தற்போது ரூ 60 கோடியாக குறைந்துள்ளது.

உதிரிபாகங்கள்
இனி கோடைக் காலம் என்பதால் வரும் காலங்களில் குடைகளின் விலை உயரும். குடைகளுக்கான மூலப்பொருட்களின் விலை அதிகம் என்பதால் இந்த விலை உயர்வு ஏற்படும். குடைகளுக்கான சிறிய சிறிய உதிரி பாகங்களை இறக்குமதி செய்து வருகிறோம். இந்தியாவில் சில உதிரிபாகங்களை தயாரிக்கவில்லை. இதனால் இறக்குமதி செய்து உதிரி பாகங்கள் வாங்கப்படுவதால் உள்நாட்டு குடைகளின் விற்பனையும் அதிகரிக்கும் என்றார்.

பேப்ரிக்
இதுகுறித்து ஜான் குடை நிறுவனத்தின் ஜோசப் கூறுகையில் இறக்குமதி வரி உயர்வு என்பது உள்நாட்டு தொழிற்சாலைகளுக்கு மிகப் பெரிய பிரச்சினையாகும். குடைகளுக்கு பயன்படுத்தும் பேப்ரிக்கை இந்தியாவில் யாரும் தயாரிக்கவில்லை. குடைகளுக்கு நைலான் டஃபேடா எனும் பேப்ரிக்கை பயன்படுத்துகிறோம். இதேதான் ரெயின்கோட்டுகளுக்கும் பயன்படுத்துகிறோம்.

வரி விலக்கு
குடைகளை விரித்து பார்த்தால் தெரியும், அதில் சிறிய ஓட்டைகள் இருந்தாலும் தெரிந்துவிடும். எனவே இந்தியாவில் அது போன்ற பிரச்சினை இல்லாமல் பேப்ரிக் மெட்டிரீயலை தயார் செய்யும் நிறுவனங்கள் இல்லை. இதனால் இவற்றை தைவானிலிருந்து இறக்குமதி செய்கிறோம். இதுபோன்ற உதிரி பொருட்கள், கச்சாப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் வரியை குறைக்க வேண்டும். பேப்ரிக் பொருளுக்கு இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். குடைகளுக்கு வரியை ஏற்றியது குறித்து உற்பத்தியாளர்களிடையே இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன. இறக்குமதி செய்யப்படும் கச்சாப் பொருட்கள் இந்த வரி உயர்வால் அதிக விலையேற்றத்தை சந்திக்க நேர்ந்தால் அது உள்நாட்டு குடைகளின் விலையையும் உயர்த்திவிடும். எனவே மத்திய நிதித்துறை அமைச்சகம் இந்த விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டும் என்பது உற்பத்தியாளர்கள் கோரிக்கையாக உள்ளது.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications