கடலுக்கு அடியில் 3000 கிமீக்கு.. வருகிறது கேபிள்.. சவுதி, எமிரேட்ஸுக்கு மின்சாரம் அனுப்பும் இந்தியா!
சென்னை: சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு இந்தியா மின்சாரத்தை ஏற்றுமதி செய்ய உள்ளது. சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மின்சாரம் அனுப்புவதற்காக, சுமார் ₹90,000 கோடி செலவில் கடலுக்கு அடியில் மின்சாரப் பரிமாற்றக் கம்பிகளை அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்தார்.
கடல்வழி மின் இணைப்பு
சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் இதற்கான கூட்டு முயற்சி ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. சவுதி அரேபியாவுடனான மின்சார பரிமாற்ற இணைப்பு ₹47,000 கோடி செலவில் அமைக்கப்படும். ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கான திட்டத்திற்கு ₹43,000 கோடி செலவாகும் என்று அமைச்சர் கட்டார் தெரிவித்தார்.

கடந்த 11 ஆண்டுகளில் மின்சாரத் துறையின் முக்கிய சாதனைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின்சார ஏற்றுமதியை அதிகரிக்கும் அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த இரண்டு பரிமாற்றத் திட்டங்களும் இருக்கும் என்றும், ஒவ்வொன்றும் 2 ஜிகாவாட் மின்சாரத்தை எடுத்துச் செல்லும் திறன் கொண்டிருக்கும் என்றும் கூறினார். சவுதி அரேபியா திட்டத்தில் 1,400 கி.மீ., தூரத்திற்கு கடலுக்கு அடியில் கேபிள் இருக்கும். ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மின்சாரம் ஏற்றுமதி செய்யும் திட்டத்தில் 1,600 கி.மீ., தூரத்திற்கு கடலுக்கு அடியில் கேபிள் அமைக்கப்படும்.
நிலக்கரி மின் உற்பத்தி
2035-க்குப் பிறகு நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களை இந்தியா அமைக்காது என்றும், மின் தேவைக்காக அணு மின் உற்பத்தி திறனை அதிகரிக்க அரசாங்கம் முயற்சி செய்து வருவதாகவும் கட்டார் கூறினார். அணுமின் நிலையங்களை இறுதி செய்வதற்கான கால அவகாசம் தற்போது 13 ஆண்டுகளாக உள்ளது. இதை 8-9 ஆண்டுகளாக குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிலநடுக்க அபாயப் பகுதி 5-ல் இல்லாத ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு அணுமின் நிலையம் இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மின்சாரம் அனுப்புவதற்காக கடலுக்கு அடியில் மின்சாரப் பரிமாற்றக் கம்பிகளை அமைக்கும் திட்டத்தின் மூலம் இந்தியாவின் மின்சார ஏற்றுமதி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடலுக்கு அடியில் கேபிள் எப்படி அமைக்கப்படும்?
பாதை திட்டமிடல்: பொறியாளர்கள் முதலில் கேபிளுக்கு சிறந்த மற்றும் பாதுகாப்பான பாதையை முடிவு செய்கிறார்கள், பாறைகள், கட்டிடங்கள் மற்றும் பிற தடங்கல்கள் இல்லாமல் கேபிள் அமைப்பார்கள்.
பள்ளம் தோண்டுதல்: சிறப்பு இயந்திரங்களைப் பயன்படுத்தி திட்டமிடப்பட்ட பாதையில் ஒரு நீண்ட, ஆழமான பள்ளம் தோண்டப்படுகிறது.
கேபிள் இடுதல்: கனரக மின்சார கேபிள்கள் அமைக்க இங்கே பெரிய தண்ணீர் புகாத டியூப் போன்ற அமைப்பு கவனமாக வைக்கப்படும். இந்த கேபிள்கள் உயர் மின்னழுத்தத்தைக் கையாளும் வகையில் அமைக்கப்படும்.
கேபிளைப் பாதுகாத்தல்: நீர், பாறைகள் அல்லது பெரிய மீன்கள் ஆகியவற்றிலிருந்து சேதத்தைத் தடுக்க கேபிள் மணல், கான்கிரீட் அடுக்குகள் அல்லது பாதுகாப்பு உறைகளால் மூடப்பட்டிருக்கும்.
குழியை மீண்டும் நிரப்புதல்: குழியை மீண்டும் மண்ணால் நிரப்பபுவார்கள். கிட்டத்தட்ட தரைக்கு அடியில் அமைக்கப்படும் கேபிள் போலவே இருக்கும்.. ஆனால் கடலுக்கு அடியில் இன்னும் வலுவாக அமைக்கப்படும்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications