Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வயது 80.. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சோனியாவின் ஆதரவை பெற்ற மல்லிகார்ஜூன கார்கே.. எப்படி? யார் இவர்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் தொடர்பாக பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் சோனியா காந்தியின் ஆதரவுடன் அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார். இவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படும் நிலையில் இவர் யார்? கர்நாடகத்தை சேர்ந்த இவர் சோனியா காந்தியின் ஆதரவை பெற்றது எப்படி? என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி உள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அக்டோபர் 17 ல் நடைபெற உள்ளது.

இதில் திருவனந்தபுரம் எம்பி சசிதரூர் போட்டியிடுவதாக முதன் முதலாக அறிவித்தார். அதேபோல் திக்விஜய் சிங் உள்பட இன்னும் சில தலைவர்கள் போட்டியிலாம் என்ற தகவல்கள் வெளியாகின.

மறுத்த அசோக் கெலாட்

மறுத்த அசோக் கெலாட்

இதற்கு மத்தியில் தான் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை காங்கிரஸ் தலைவராக்க சோனியா காந்தி விரும்புவதாக தகவல்கள் வெளியாகின. தொடக்கத்தில் போட்டியிட உள்ளதாக கூறிய அசோக் கெலாட் அதன்பிறகு ராஜஸ்தான் முதல்வர் பதவியை விட்டு கொடுக்க முன்வராமல் குழப்பத்தை ஏற்படுத்தினார். அதன்பிறகு நேற்று காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை என அவர் தெரிவித்தார்.

3 பேர் மனுத்தாக்கல்

3 பேர் மனுத்தாக்கல்

இதையடுத்து அசோக் கெலாட்டுக்கு மாற்றாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மல்லிகார்ஜூன கார்கே போட்டியிட உள்ளதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி காங்கிரஸ் தலைவர் தேர்தல் பதவிக்கு வேட்புமனுத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்ற நிலையில் சசிதரூர், மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கேஎன் திரிபாதி ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். இதில் கேஎன் திரிபாதி மனுவை வாபஸ் பெறலாம் என கூறப்படுகிறது.

கார்கே VS சசிதரூர் போட்டி

கார்கே VS சசிதரூர் போட்டி

இதனால் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டி என்பது மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோர் இடையே தான் உள்ளதாக கருதப்படுகிறது. இருப்பினும் சோனியா காந்தி, ராகுல் காந்தியின் ஆதரவுடன் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு உள்ளதால் அவரே வெற்றி பெற்று காங்கிரஸ் தலைவராக செயல்படலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் மல்லிகார்ஜூன கார்கே யார்? அவர் எப்படி சோனியா காந்தியின் ஆதரவை பெற்றார் என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

தேர்வானது எப்படி?

தேர்வானது எப்படி?

மல்லிகார்ஜூன கார்கே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர். கர்நாடகத்தை சேர்ந்த இவர் மாநிலங்களவயைில் எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். அதாவது அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இருந்து விலகிய நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால், மல்லிகார்ஜூன கார்கே, திக்விஜய் சிங் ஆகியோரின் பெயர்கள் காங்கிரஸ் கட்சியில் முன்னணியில் இருந்தன. இதுதொடர்பாக நேற்று இரவு கட்சி தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்திய நிலையில் தான் மல்லிகார்ஜூன கார்கேவின் பெயர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சோனியா காந்தி டிக் செய்துள்ளார். இவர் நீண்ட நெடிய அரசியல் அனுபவம் கொண்டவர் என்பதாலும், சோனியாவின் நம்பிக்கைக்கு உரியவர் என்பதாலும் தான் அவரை சோனியா காந்தி தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

80 வயதாகும் மல்லிகார்ஜூன் கார்கே

80 வயதாகும் மல்லிகார்ஜூன் கார்கே

மேலும் இவர் தலித் எனும் பட்டியலினத்தை சேர்ந்தவர். இதன்மூலம் காங்கிரஸ் கட்சி பட்டியலின மக்களின் வாக்குகளையும் பெற காங்கிரஸ் கட்சி முயற்சிக்கலாம் என அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட்டுள்ள மல்லிகார்ஜூன கார்கே கர்நாடகத்தின் கலபுரகியில் பிறந்தார். 1942ல் பிறந்த மல்லிகார்ஜூன கார்கேவுக்கு தற்போது வயது 80 ஆகும். இவர் தற்பாது மாநிலங்களைவில் எதிர்க்கட்சி தலைவராக உள்ளார்.

தொடர்ந்து 11 தேர்தலில் வெற்றி

தொடர்ந்து 11 தேர்தலில் வெற்றி

இவர் கடந்த 1972 முதல் 2008 வரை கர்நாடகத்தில் நடந்த 9 சட்டசபை தேர்தல்களில் தொடர்ச்சியாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு 2009 நாடாளுமன்ற தேர்தலில் கலபுரகியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பியானார். இதன்மூலம் 10 தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று சாதனை படைத்தார். இதற்கு பலனாக அப்போதைய பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை மற்றும் ரயில்வே துறைகளில் மத்திய அமைச்சராக செயல்பட்டார். அதன்பிறகு 2014ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்றார்.

2019ல் முதல் தோல்வி

2019ல் முதல் தோல்வி

இருப்பினும் கடந்த 2019ல் நடந்த தேர்தலில் கலபுரகி நாடாளுமன்ற தொகுதியில் மல்லிகார்ஜூன கார்கே தோல்வியடைந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட உமேஷ் யாதவ் வெற்றி பெற்றார். இந்த உமேஷ் யாதவ் என்பவர் காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்து மல்லிகார்ஜூன் கார்கேவை வீழ்த்தினார். இதன்மூலம் தேர்தல் அரசியலில் தோல்வியை சந்திக்காத நபர் என்ற மல்லிகார்ஜூன கார்கேவின் பெருமை முடிவுக்கு வந்தது.

 மேலிடத்துடன் நெருக்கம்

மேலிடத்துடன் நெருக்கம்

இருப்பினும் அவரது அரசியல் அனுபவத்துக்காக மாநிலங்களவை எம்பி பதவி வழங்கப்பட்டது. தற்போது கர்நாடகத்தில் இருந்து அவர் மாநிலங்களை எம்பியாக உள்ளார். சமீபத்தில் குலாம் நபி ஆசாத்தின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததால் மல்லிகார்ஜூன் கார்கே மாநிலங்களை எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். இதுதவிர மல்லிகார்ஜூன் கார்கே கர்நாடகத்தில் அமைச்சராகவும், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராகவும், எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டார். மேலும் கடந்த 11 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி சார்ந்து பல்வேறு முக்கிய பொறுப்புகளில் மல்லிகார்ஜூன் கார்கே பொறுப்பு வகித்துள்ளார். இந்த சமயத்தில் மல்லிகார்ஜூன் கார்கே சோனியா காந்தி, ராகுல்காந்தியின் நம்பிக்கைக்குரிய நபராக தன்னை மாற்றி கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+