உயர்நீதிமன்ற மொத்த நீதிபதிகள் 650.. ஓபிசி, எஸ்சி, எஸ்டி எத்தனை பேர் தெரியுமா? அதிர வைக்கும் டேட்டா!
டெல்லி: நாட்டின் உயர்நீதிமன்றங்களின் மொத்தம் 650 நீதிபதிகளில் ஓபிசி, எஸ்சி, எஸ்டி ஜாதியினருக்கான பிரதிநிதித்துவம் மிக மிக சொற்பம் என்கிற அதிர்ச்சித் தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
ராஜ்யசபாவில் எம்.பி. ஜான் பிரிட்டாஸ் எழுப்பிய கேள்விக்கு மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அளித்த பதில்:

6 ஆண்டுகளில் உயர்நீதிமன்றங்களில் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை- 650
மொத்தம் 650 நீதிபதிகளில் 492 பேர் - 75.7% பொதுப் பிரிவை சேர்ந்தவர்கள்.
எஸ்சி பிரிவினர் 23 பேர் - 3.54%
எஸ்டி பிரிவினர் 10 பேர் - 1.54%
இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) 76 பேர் - 11.7%
சிறுபான்மை சமூகங்களை சேர்ந்தவர்கள் 36 பேர் - 5.54%
பெண் நீதிபதிகள் எண்ணிக்கை 111- 14.1%
பஞ்சாப்- ஹரியானா உயர்நீதிமன்றத்தில் அதிக பெண் நீதிபதிகள்- 15 பேர்
சென்னை உயர்நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள்12 பேர்
மும்பை உயர்நீதிமன்ற பெண் நீதிபதிகள் - 11 பேர்
உச்சநீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் 3 பேர் -8.82%
எந்த கேட்டகிரியிலும் வராத நீதிபதிகள் எண்ணிக்கை- 13
முன்னதாக கடந்த ஜூலை மாதம் 21-ந் தேதி லோக்சபாவில் மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஓவைசி இதேபோல கேள்வி எழுப்பி இருந்தார். அப்போது மத்திய அரசு அளித்த பதில்:
2018 முதல் 2023-ம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி நியமிக்கப்பட்ட நீதிபதிகள் 604
604 நீதிபதிகளில் பொதுப் பிரிவை சேர்ந்தவர்கள் 458 பேர்
எஸ்டி பிரிவு நீதிபதிகள் - 9
எஸ்சி பிரிவு நீதிபதிகள் - 18
இதர பிற்படுத்தப்பட்ட வகுபு நீதிபதிகள்- 72 பேர்
சிறுபான்மை இன நீதிபதிகள்- 34 பேர்
எந்த கேட்டகிரியிலும் வராத நீதிபதிகள் - 13 பேர்
நீதித்துறை இடஒதுக்கீடு: நீதித்துறையில் நீதிபதிகள் நியமனங்களில் ஓபிசி, எஸ்சி, எஸ்டி, சிறுபான்மையினருக்கான பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்பது வெளிப்படையாக உள்ள உண்மை. ஆகையால் நீதித்துறையிலும் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும் என்பது தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் கோரிக்கை.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications