Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொரோனா vs குரங்கு அம்மை! எது அதிக ஆபத்து? மருத்துவ நிபுணர்கள் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் 4 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த நோயும் கொரோனாவை போல கொடிய பாதிப்பை ஏற்படுத்துமா? என்ற கேள்விக்கு மருத்துவ நிபுணர்கள் பதிலளித்துள்ளனர்.

கடந்த 2020-ம் ஆண்டு சீனா நாட்டில் உருவான கொரோனா எனும் கொடிய வைரஸ் நோய் உலக நாடுகளை அலற வைத்தது என்றே சொல்லலாம். வல்லரசு நாடுகள் வளர்ந்து வரும் நாடுகள் என அனைத்து நாடுகளையும் பயம் காட்டியது என்றே சொல்லலாம்.

ஒருவரிம் இருந்து மற்றவர்களுக்கு காற்றின் மூலம் பரவும் கொரோனா நோயினால் எண்ணற்ற மக்கள் பலியாகியுள்ளனர். முதலில் தடுப்பூசி மற்றும் மருந்து கண்டுபிடிக்காததால் இந்நோய்க்கு லாக்டவுன் மட்டுமே மருந்தாக கருதப்பட்டது. லாக்டவுனால் பல தரப்பு மக்கள் பாதிக்கப்பட்டனர்.

 இந்தியாவில் 4 பேருக்கு குரங்கு அம்மை

இந்தியாவில் 4 பேருக்கு குரங்கு அம்மை


பின்னர் தடுப்பூசி அளிக்கப்பட்ட பிறகே இந்த நோயின் தாக்கம் சற்று குறைந்தது என்று சொல்லலாம். இந்த நிலையில், இதற்கு மாற்றாகவும், உலக நாடுகளுக்கு மீண்டும் ஒரு சவாலாகவும் குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. உலக நாடுகளை பெரும் பதற்றத்துக்கு உட்படுத்திய கொரோனா வைரசே இன்னும் ஓயாத நிலையில், குரங்கு அம்மை (Monkeypox) எனும் வைரஸ் நோய் பரவி வருவது உலக நாடுகளை மீண்டும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது கடந்த சில நாட்களில் இந்தியாவில் மட்டும் குரங்கு அம்மையால் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல தான் கொரோனாவும் ஆரம்பத்தில் மெதுவாக இந்தியாவில் பரவியது. ஆனால் போக போக அதன் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து மக்கள் மத்தியில் நீங்கா பயத்தை ஏற்படுத்தியது.

 பெரிய பாதிப்பை ஏற்படுத்துமா?

பெரிய பாதிப்பை ஏற்படுத்துமா?

எனவே தற்போது பரவி வரும் குரங்கு அம்மையும் கொரோனாவை போல் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ? என மக்கள் பீதியடைந்து வருகின்றனர். ஏனென்றால் கொரோனா வைரஸ் போலவே உலக நாடுகளில் குரங்கு அம்மை வைரஸ் நோய் பரவி வருவதால் மக்கள் மத்தியில் இந்த பயம் ஏற்பட்டுள்ளது. குரங்கு அம்மை ஒரு தீவிரமான வைரஸ் பாதிப்பு நோய், மனிதர்களை தாக்கினால், வழக்கமாக 2 முதல் 4 வாரங்களுக்கு இந்நோய் பாதிப்பு நீடிக்கும். குறிப்பிடத்தக்க சுகாதார சூழல் உடையவர்களுக்கோ, இல்லாதவர்களுக்கோ இந்நோயினால் தீவிர பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக காய்ச்சல், தோலில் சிறு கொப்பளங்கள் (முகத்தில் தொடங்கி கை, கால், உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் வரை பரவக்கூடும்), நிணநீர் கணுக்கள் வீக்கம், தலைவலி, தசைபிடிப்பு, உடல் சோர்வு,தொண்டை புண் உள்ளிட்டவையே குரங்கு அம்மை பாதித்ததற்கான பொதுவான அறிகுறிகளாக உள்ளது.

 பேரழிவாக மாற வாய்ப்பில்லை

பேரழிவாக மாற வாய்ப்பில்லை

மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு குரங்கு அம்மை நோய் புதிதது அல்ல என்றாலும், கடந்த சில வாரங்களாக பல நாடுகளில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால், குரங்கு அம்மை பரவலும் கொரோனா தொற்றால் ஏற்பட்ட அளவுக்கு மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தி விடுமா? என்ற கேள்விகளும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கு நிபுணர்கள் தரும் பதில் என்னவென்றால், ஜூலை மத்திய வார நிலவரப்படி பெருந்தொற்று என்ற நிலையை குரங்கு அம்மை எட்டவில்லை என்பதே. வைரஸ் பரவி தொற்றுநோயாக மாறினாலும் குரங்கு அம்மை உலகளாவிய சுகாதாரப் பேரழிவாக மாற வாய்ப்பில்லை என்று தற்போதைய தரவுகள் காட்டுகிறது என்பதே சுகாதார வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.

 குரங்கு அம்மை உலக அளவில் பரவுமா?

குரங்கு அம்மை உலக அளவில் பரவுமா?

கடந்த 2009 ஆம் ஆண்டு பரவிய எச்1 என்1 இன்புலுயன்சா வைரஸ் மற்றும் 2019-ம் ஆண்டு பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஆகிய இரு நோய்களும் உலக முழுவதும் வேகமாக பரவின. எனவே இந்த இரண்டு நோய்களும் பெருந்தொற்றுக்க்கள் என சர்வதே மருத்துவ நிபுணர்களும் உடனடியாக ஒப்புக்கொண்டனர். இதற்கு முரணாக எபோலோ வைரஸ் எபிடெமிக் ஆனது மேற்கு ஆப்பிரிக்காவில் 2014 முதல் 2016 வரை பரவியது. ஆனால் ஒரு பிராந்தியத்தில் மட்டுமே பரவியது. உலகம் முழுவதுக்கும் செல்லவில்லை.

 பெருந்தொற்றாக அறிவிக்கப்படுமா?

பெருந்தொற்றாக அறிவிக்கப்படுமா?

குரங்கு அம்மை பரவலின் நிலை இந்த இரண்டுக்கும் இடையில்தான் தற்போது உள்ளது. ஜூலை 2-வது வார நிலவரப்படி குரங்கு அம்மை 63 நாடுகளில் 9,200 பேருக்கு பரவியுள்ளது. இதில் பெரும்பாலான பாதிப்புகள் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் மட்டுமே ஏற்பட்டுள்ளன. ஆப்பிரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு நாடுகளில் மிகக்குறைவான பாதிப்புகளே உள்ளன. இதற்கான காரணங்கள் தான் இன்னும் முழுமையாக அறியப்படவில்லை. தற்போதைய பரவல் அளவு உலக நாடுகள் இதை பெருந்தொற்றாக அறிவிக்க போதுமானதா? என்றால் இருக்கலாம் என்பதே பதிலாக உள்ளது. தற்போதைக்கு பெருந்தொற்றாக இல்லையென்றாலும் அது விரைவில் அந்த நிலைக்கு மாறலாம் எனவும் மருத்துவ நிபுணர்கள் சந்தேகம் எழுப்பாமல் இல்லை.

 கொரோனா போல கொடியது அல்ல

கொரோனா போல கொடியது அல்ல

குரங்கு அம்மை நோயானது தொடுதல் உள்பட மிக நெருக்கமான தொடர்புகள் மூலமே பரவுகிறது. காற்றின் மூலமே பரவும் தன்மையை கொண்ட கொரோனா போல் அல்லாமல் இது மிகவும் நெருக்கமான தொடுதல் மூலமே பரவும் என்பது சற்று நிம்மதி அளிப்பதாக மருத்துவ நிபுணர்களின் வாதமாக உள்ளது. கொரோனா போல மிக மோசமான பெருந்தொற்று நோயாக குரங்கு அம்மை நோய் மாறாது என்றதொரு வாதமும் முன்வைக்கப்படுகிறது. ஏனெனில், கொரோனா வைரஸ் போல வேகமாக இது பரவக்கூடியது அல்ல. கொரோனாவை விட குரங்கு அம்மை சற்று தீவிரம் குறைந்ததாகவே உள்ளது.

 இறப்பு விகிதம் குறைவு

இறப்பு விகிதம் குறைவு

தற்போதைய உயிரிழப்பு விகிதம் ஆயிரம் பேருக்கு ஒன்றுக்கும் கீழாகவே உள்ளது. இது தடுப்பூசி செலுத்தும் முன்பாக கொரோனாவில் ஏற்பட்ட உயிரிழப்புகளுடன் ஒப்பிடுகையில் மிக மிக குறைவேயாகும். அதேநேரத்தில் கொரோனாவுக்கு ஆரம்ப கட்டத்தில் தடுப்பூசிகள் இல்லாமல் இருந்தது. ஆனால், குரங்கு அம்மை நோய்க்கு தற்போது புழக்கத்தில் இருக்கும் சின்னமை தடுப்பூசிகளே போடலாம் என்று மருத்துவ நிபுணர்கள் சொல்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+