ஆபரேஷன் சிந்தூர்! பாகிஸ்தானை மிரள வைத்த இந்தியா! அறிய வேண்டிய 10 முக்கிய விஷயங்கள் என்ன?
டெல்லி: பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை அழிக்க ஏவுகணை தாக்குதலை இந்தியா நடத்திய நிலையில் 10 முக்கிய விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மண்ணிலிருந்தே நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 9 இடங்களில் இருந்த தீவிரவாத முகாம்கள் அடியோடு அழிக்கப்பட்டன. ஏற்கெனவே நடத்தப்பட்ட தாக்குதல்களை விட இது வலிமையானது என சொல்லப்படுகிறது.

இந்த தாக்குதலை இரவு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி தீவிரமாக கண்காணித்து வந்தார். இந்தியாவின் ஏவுகணைத் தாக்குதலில் பொதுமக்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. அதே வேளையில் அந்தநாட்டு ராணுவ தளங்களிலும் தாக்குதல் நடத்தப்படவில்லை என இந்திய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
இந்தியா இத்தனை எளிதில் பாகிஸ்தானுக்கு கொடுத்த பதிலடியால் உலக நாடுகள் வாயடைத்து போயுள்ளன. இன்று இரவு 1.44 மணி முதல் நடந்தது என்ன என்பதையும் இந்த தாக்குதலின் போது 10 முக்கிய விஷயங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
- பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை அழிக்கும் நடவடிக்கைக்கு ஆபரேஷன் சிந்தூர் என இந்திய ராணுவம் பெயரிட்டது.
- தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதும் நீதி நிலைநாட்டப்பட்டது, ஜெய்ஹிந்த் என இந்திய ராணுவம் அறிவித்தது.
- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத அமைப்புகளை அழிப்பதே இந்த சிந்தூரின் நோக்கமாகும்.
- ஜம்மு காஷ்மீரில் பஹல்காமில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகளின் உயிரை பறித்த கொடூர தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவே ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.
- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வெடி சப்தங்கள் கேட்டதால் அங்கு பதற்றம் நிலவியது.
- ஆபரேஷன் சிந்தூர் சாத்தியப்படுத்தியது எப்படி என்பது குறித்து விரிவான விளக்கத்தை இன்று அளிப்பதாக பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
- இந்தியா- பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள அனைத்து வான்வழி பாதுகாப்பு கருவிகளும் செயல்படத் தொடங்கிவிட்டன.
- பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மொத்தம் 9 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
- சொந்த மண்ணில் இருந்தபடியே பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்களை அடியோடு அழித்தன முப்படைகள்
- பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்டவுடனேயே பாகிஸ்தானுக்கான சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.
பாகிஸ்தானில் தீவிரவாதிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஸ்ரீநகரில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டன. அது போல் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் இன்று மூடப்பட்டுள்ளது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications