அதென்ன வந்தே மெட்ரோ.. வந்தே பாரத்துடன் எந்த வகையில் வேறுபடுகிறது? முழு விவரம்!
டெல்லி: வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கும் வந்தே மெட்ரோவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா?
இந்தியாவில் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்கள் பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இது அதி வேகத்தில் செல்வதால் பயண நேரம் மிச்சமாவதால் பயணிகளை இந்த ரயில்களை நாடுகிறார்கள்.

இதை கருத்தில் கொண்டு இந்திய ரயில்வே பாதி அதி வேக ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது. அதற்கு பெயர் வந்தே மெட்ரோ என வைத்துள்ளது. இந்த வந்தே மெட்ரோ ரயில்கள் வரும் டிசம்பர் மாதம் முதல் தொடங்கப்படும் என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இந்த ரயிலுக்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து வரும் 2024- 2025 ஆம் ஆண்டுக்கு ரயில்களை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. புதிதாக வேலை தேடுவோர், மாணவர்களுக்கு இந்த ரயில்களில் பயணிக்கும் போது கையை கடிக்கக் கூடிய கட்டணத்தில் இருக்காது என்பதால் இது போன்ற பட்ஜெட் பிரன்ட்லி ரயில்கள் இயக்கப்படுகிறது.
வந்தே பாரத் மற்றும் வந்தே மெட்ரோவுக்கு இடையே உள்ள வித்தியாசங்களை தெரிந்து கொள்ளுங்கள். வந்தே மெட்ரோ ரயில்கள் வந்தே பாரத் ரயில்களை விட வேகமாக இயங்கும் என தெரிகிறது. வந்தே மெட்ரோ ரயிலில் 8 பெட்டிகள் மட்டுமே இருக்கிறது. ஆனால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் 16 பெட்டிகள் உள்ளன.
வந்தே மெட்ரோ ரயில்கள் குறைந்த தூரம் கொண்ட நகரங்களுக்கு இடையே இயக்கப்படும். ஆனால் வந்தே பாரத் ரயில்கள் அதிக தூரம் கொண்ட நகரங்களுக்கு இடையே இயக்கப்படுகிறது. 500 கி.மீ. தூரம் கொண்ட நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் இயக்கப்படுகிறது. ஆனால் வந்தே மெட்ரோ ரயில்கள் 100 கி.மீ. தூரம் கொண்ட நகரங்களுக்கு இடையே இயக்கப்டுகிறது.
முதலில் வந்தே மெட்ரோ ரயில் மும்பையில் இயக்கப்படும். இவை மும்பையின் உள்ளூர் ரயில்களின் ஒரு பகுதியாக இருக்கும். உள்ளூரில் உள்ள 238 ரயில்களை மேம்படுத்த ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. வந்தே மெட்ரோ ரயில்கள் அடிக்கடி சில நிமிடங்களுக்கு ஒரு முறை இயக்கப்படும். தினந்தோறும் பயணம் செய்யும் பயனாளிகளுக்கு வந்தே மெட்ரோ டிக்கெட்டுகள் மலிவு விலை கிடைக்கும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications