கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை எந்த செல்போனை பயன்படுத்துகிறார் தெரியுமா? அவரே சொன்ன சீக்ரெட்
டெல்லி: கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை எந்த செல்போனை பயன்படுத்துகிறார் தெரியுமா?
சுந்தர் பிச்சை கணினி பொறியாளர். இவர் கூகுள் நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாகி ஆவார். இணையம் தொடர்பான சேவைகளில் புகழ்பெற்ற நிறுவனமான கூகுள் 2015 ஆம் ஆண்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டது.

சிஇஓ ஆன சுந்தர் பிச்சை கூகுள் குரோம், குரோம ஓ எஸ் உள்ளிட்ட கூகுளின் சில தயாரிப்புகள் நல்ல வெற்றியை கண்டன. இவர் ஐஐடி கோரக்பூரில் பிடெக் படித்திருந்தார். இவர் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்எஸ் பயின்றார். அது போல் அவர் பென்னிசில்வேனியா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றார்.
சுந்தர் பிச்சை தமிழகத்தை சேர்ந்தவர். இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் மற்றும் மைக்ரோசாப்ட் ஃபயர்பாக்ஸ் போன்ற போட்டி நிறுவனங்களை மிஞ்சி கூகுள் குரோம் தனித்துவமான வெற்றியை பெற்றது. அதைத் தொடர்ந்து பிச்சை சர்வதேச அளவில் அறியப்பட்டார். சுந்தர் பிச்சை ஒரு கிரிக்கெட் ரசிகர். அவருக்கு 12 வயது வரை அவரது குடும்பத்தில் யாரிடமும் செல்போன் வைத்திருக்கவில்லை.
அவர் கூகுளில் சேருவதற்கு முன்பு தனது நண்பரிடம் பேசியிருந்தார். தனது சிறுவயது முதலே டயல் செய்த தொலைபேசி எண்களை நினைவு வைத்திருப்பாராம். சுந்தர் பிச்சை கூகுள் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தாலும் அவர் அனைவரிடமும் எளிமையாக பழகக் கூடியவர். கூகுள் நிறுவனத்தின் டெவலப்பர்கள் சந்திப்பு கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்டது.
அப்போது பிக்சல் ஃபோல்ட் எனும் ஸ்மார்ட்போனை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்து வைத்தது. இந்த மாடல் அந்த நிறுவனத்தின் முதல் மடிப்பு ரக ஸ்மார்ட்போன் ஆகும். இந்த நிலையில் அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, பிரபல யூடியூபரான அருண் மைனியுடன் ஸ்மார்ட்போன்கள் குறித்து நீண்ட உரையாடலை நடத்தியிருந்தார்.
அப்போது பிக்சல் ஃபோல்ட் போனை பயன்படுத்துகிறீர்களா என கேட்கப்பட்டகேள்விக்கு பதிலளித்து பேசிய சிஇஓ சுந்தர் பிச்சை, ஆமாம் என கூறினார். அந்த போன் குறித்து மதிப்பிடுவதற்காக சில காலமாக பயன்படுத்தி வருவதாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் தன்னுடைய விமான பயணங்களின்போதும், தன்னுடைய பிஸியான நாட்களிலும் இலகுமான போன்களை வைத்திருக்க விரும்புகிறேன். ஏனென்றால் நான் செய்வது எல்லாம் என்னுடைய போனை வெளியே எடுத்து விரைவாக மின்னஞ்சலை சரிபார்ப்பது மட்டுமே என கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
சிஇஓ சுந்தர் பிச்சை அவருடைய முதன்மை ஸ்மார்ட்போனான கூகுள் பிக்சஸ் 7 ப்ரோ உடன் சாம்சங் கேலக்ஸி மற்றும் ஐபோன் ஆகிய ஸ்மார்ட்போன் சிலவற்றை மதிப்பிடுவதற்காக பயன்படுத்தி வருகிறார். தான் பயன்படுத்தும் ஒவ்வொரு போனிலும் ஒவ்வொரு சிம்கார்டை அவர் வைத்திருப்பதையும் தெரிவித்திருந்தார்.
சுந்தர் பிச்சையின் சென்னை வீடு விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னை அசோக் நகரில் தான் சுந்தர் பிச்சையின் வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டை சுந்தர் பிச்சையின் தந்தை விற்பதற்கு முடிவு செய்துள்ளார். அதன்படி இதைத் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கும் மணிகண்டன் விலைக்கு வாங்கியுள்ளார்.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி












Click it and Unblock the Notifications