"எவ்ளோ டிரோன் வேணாலும் அனுப்பு"! பாகிஸ்தானுக்கு பயம் காட்டிய ஆகாஷ் ஏவுகணை! உருவாக்கியவர் யார்?
டெல்லி: பாகிஸ்தான் டிரோன்களை எல்லாம் அழித்த ஆகாஷ் ஏவுகணை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா? மேலும் இந்த ஆகாஷ் ஏவுகணையை உருவாக்கியவர் டிஆர்டிஓ விஞ்ஞானி டாக்டர் பிரலாதா ராமாராவ் ஆவார். அவர் தனது உருவாக்கம் குறித்து என்ன சொல்கிறார் என்பதை பார்க்கலாம்.

இந்திய எல்லை பகுதிகளில் பொது மக்கள் வசிக்கும் பகுதிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றை தாக்கும் நோக்கில் பாகிஸ்தான் டிரோன்களை பயன்படுத்தி வருகிறது. ஆனால் இவற்றை இந்தியாவின் பாதுகாப்பு கவசங்கள் அழித்து வருகின்றன.
அந்த வகையில் இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணை அமைப்பானது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இந்திய படைகளின் வலிமைகளும் அதன் திறமைகளும், பாதுகாப்பு தொழில்நுட்பங்களும் எப்படி இருக்கும் என்பதை ஆகாஷ் படம் போட்டு காட்டிவிட்டது. இந்தியாவின் பலத்தையும் நிரூபித்துவிட்டது.
ஏவுகணையை தயாரித்தவர்
இந்த ஆகாஷ் ஏவுகணையை தயாரித்தவர் டிஆர்டிஓவின் முன்னாள் விஞ்ஞானி டாக்டர் பிரலாதா ராமாராவ் ஆவார். இவரை ஏவுகணை நாயகனும் முன்னாள் குடியரசு தலைவருமான ஏபிஜே அப்துல் கலாம் தான் தேர்வு செய்தார்.
எல்லை பகுதிகளில் பதற்றம்
கடந்த 8, 9 ஆகிய தேதிகளில் எல்லை கோட்டு பகுதிகள் மற்றும் மேற்கு பகுதி எல்லைகளில் பாகிஸ்தானின் பல டிரோன்களை இந்தியா வெற்றிகரமாக அழித்தது. பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு கவசங்கள் அழிக்கப்பட்டன. போர் விமானமான எஃப் 16 விமானம் அழிக்கப்பட்டது.
பேரழிவு
பாகிஸ்தானுக்கு இந்த பேரழிவை ஏற்படுத்தியது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ்தான். இந்திய ராணுவத்தினர் எப்படிப்பட்டவர்கள் என்பதை மட்டுமல்ல, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்திய ஆயுதங்கள் எப்படி என்பதையும் ஆகாஷ், உலக நாடுகளுக்கே வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.
ஆகாஷ்
இந்த ஆகாஷ் மணிக்கு 4,200 கி.மீட்டர் வேகத்தில் பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்டது. ஆகாஷ் ஏவுகணை ஒரே நேரத்தில் பல இலக்குகளை குறி வைத்து துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. பூமியிலிருந்து வானில் இருந்து தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
15 ஆண்டுகளாக உருவானது
இதை பிரலாதா தயாரிக்க 15 ஆண்டுகள் ஆனது. 78 வயதாகும் இவருக்கு, இந்தியாவுக்கு பாதுகாப்பு கருவிகளை உருவாக்குவதில் பங்களித்தமைக்காக பத்ம விருதை பெற்றுள்ளார். ஆகாஷ் திட்டத்தின் இளம் திட்ட இயக்குநராக இருந்தார். இதுகுறித்து பிரலாதா கூறுகையில் எனது வாழ்வில் மகிழ்ச்சியான நாள்.
துல்லியமாக தாக்கியது
எனது குழந்தை (ஆகாஷ் ஏவுகணை அமைப்பு) மிகவும் துல்லியமாக செயல்பட்டு எதிரிநாட்டு டிரோன்கள், ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தி வருகிறது. எதிர்பார்த்ததை கடந்து ஆகாஷ் சிறப்பாக செயல்படுவதை பார்க்கும் போது எனது கண்களில் இருந்து நீர் வருகிறது என தெரிவித்திருந்தார்.
எஸ் 400 ஏவுகணை
அது போல் ரஷ்யாவின் எஸ் 400 ஏவுகணை அமைப்பும் பாகிஸ்தான் தாக்குதலில் இருந்து இந்தியாவை காத்தது. இந்தியா- ரஷ்யா இடையே இது தொடர்பாக 5.43 பில்லியன் டாலர்கள் மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இது ஒரு நகரும் வான் பாதுகாப்பு அமைப்பு. இதை சாலை வழியாகவும் கொண்டு செல்ல முடியும். கட்டளையிடப்பட்ட 5 அல்லது 10 நிமிடங்களுக்குள் இதை பயன்படுத்தலாம்.
ரேடார்
நீண்ட தூரம் கண்காணிக்கும் ரேடார்களால் ஆபத்தை உடனே கண்டறியும். இலக்குகளை கண்டறிந்து ஏவுகணைகளை வழிநடத்தும். இலக்கை நோக்கி 2 ஏவுகணைகளை ஏவும்.
-
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications