மாணவனின் இதயத்தில்.. பிரியா, ரூபா, ஹரிதா, நமீதா.. கிறுகிறுன்னு தலை சுற்றி போன டீச்சர்.. என்னாச்சு?
டெல்லி: மாணவன் ஒருவரின் விடைத்தாள், இணையத்தில் கடந்த 2 நாட்களாகவே வைரலாகி கொண்டிருக்கிறது. என்ன காரணம்?
தேர்வு ஒன்றில் "என் இதயத்தின் செயல்பாடுகள்" என்ற தலைப்பில் இதயத்தின் படம் வரைந்து, பாகங்களை குறிப்பிடுக" என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இதற்கு மாணவர் ஒருவர் தன்னுடைய இதயத்தை படமாக வரைந்து, அதில் தன்னுடைய தோழிகளின் பெயர்களை எழுதிவைத்துவிட்டார்.
4 அறைகள்: இதயத்தின் நான்கு பாகங்களிலும் ஹரிதா, பிரியா, ரூபா, நமீதா, பூஜா என்று தன்னுடைய தோழிகளின் பெயர்களை எழுதியதுடன், இந்த பெண்கள் பற்றி சிறு குறிப்பையும் எழுதிவைத்தார். அந்த மாணவன் எழுதிய பதில் இதுதான்:

"நம்முடைய இதயத்தில் 4 அறைகள் உள்ளன. மேலே 2 கீழே 2 அறைகள் உள்ளன.. மேலே இருக்கும் அறைகள் "இடது ஆட்ரியும்", "வலது ஆட்ரியும்" என்றும் கீழே இருக்கும் அறைகள் "இடது வென்ட்ரிகிள்", "வலது வென்ட்ரிகிள்" என்றும் அழைக்கப்படுகின்றன.
பள்ளித்தோழி: இதோ, என்னுடைய இதயத்தின் வலது ஆட்ரியத்தில் உள்ளவர் ஹரிதா.. என்னுடைய பள்ளித்தோழி.. இடது ஆட்ரியத்தில் உள்ளவர் பிரியா.. என்னுடன் எப்பொழுதும் இன்ஸ்டாகிராமில் சாட்டிங் செய்வார்.. எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும்..
இதயத்தின் வலது வென்ட்ரிக்கிளில் உள்ளவர் பூஜா.. இவள் என்னுடைய முன்னாள் காதலி.. அதனால்தான், அழுத முகம் போல அவளை வரைந்து அடையாளப்படுத்தியிருக்கிறேன்..
ரூபா: இதயத்தின் இடது வென்ட்ரிக்கிளில் உள்ளவர் ரூபா.. ஸ்னாப் சாட்டில் என்னுடன் சாட்டிங் செய்வார். அவள் மிகவும் அழகாக இருப்பாள்"
இதயத்தின் கீழ் பகுதியில் உள்ளவர் நமீதா.. என்னுடைய சொந்தக்கார பொண்ணு.. அவளுக்கு தலைமுடி நீளமாக இருக்கும்.. பெரிய கண்கள் அழகா இருக்கும்.. அதனால்தான், பெரிய கண்கள் வரைந்துள்ளேன்" என்று தெரிவித்திருந்தார்.
ஆசிரியர்: இந்த பதிலை பார்த்ததுமே, விடைத்தாள் திருத்தும் டீச்சருக்கு ஆத்திரமும், கோபமும் அதிகமாகிவிட்டது.. சரி உன்னுடைய பெற்றோரை அழைத்து வா என்று சொன்னதுடன், 10 மார்க்குக்கு முட்டை மதிப்பெண் தந்துவிட்டார்.
அதற்கு பிறகு மாணவன் தன்னுடைய பெற்றோரை அழைத்து வந்தாரா என்று தெரியவில்லை.. ஆனால், அவர் வரைந்த இதயம் வரைபடம் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. இந்த பதிவை 6.43 கோடி பேர் பார்வையிட்டு உள்ளனர். 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.
கமெண்ட்கள்: அதில் நிறைய நெட்டிசன்கள் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.. "பரவாயில்லையே, இதயத்தில் 4 அறைகள் இருப்பதாவது மாணவனுக்கு தெரிந்திருக்கிறதே என்று வியந்துள்ளனர்.. மேலும் சிலரோ, "பிரியாவுக்கும், ரூபாவுக்கும் என்ன நடக்க போகுதுன்னு தெரியலையே" என்று கமெண்ட் செய்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications