நாடாளுமன்றத்தில் கனிமொழி பேசும்போது..அப்படியே வீடியோவில் கவனிச்சீங்களா? இத்தனை ஆண்டாக இல்லாத விஷயம்
டெல்லி: பெண்களுக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு தரும் சட்ட மசோதா மீதான விவாதத்தில் லோக்சபாவில் திமுக எம்பி கனிமொழி பேசியது கவனம் பெற்றுள்ளது. இந்த பேச்சின் போது அவையில் நடந்த சம்பவம் ஒன்று கவனம் பெற்றுள்ளது.
பெண்களுக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு தரும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்த மசோதாவை லோக்சபாவில் தாக்கல் செய்து இருந்தாலும், அது சட்டமாகாத நிலையில் இந்த முறை சில திருத்தங்களோடு பாஜக அதை தாக்கல் செய்துள்ளது.

அதன்படி நாடு முழுக்க மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவது. அதை அடிப்படையாக வைத்து நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதி மறுவரையரை செய்வது, அதை அடிப்படையாக வைத்து அதன்பின் பெண்களுக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு தரப்படும். தேர்தலில் இதன் மூலம் பெண்கள் அதிக அளவில் போட்டியிட முடியும் என்று பாஜக கூறுகிறது.
இந்த சட்ட மசோதா மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி அதன்பின் சட்டமாகும் என்பதால், எப்படியும் இந்த வருடம் சாத்தியமே இல்லை. அடுத்த வருடமும் சாத்தியமா என்பது சந்தேகமே. இந்த நிலையில்தான் இன்று நாடாளுமன்றத்தில் கனிமொழி அனல் பறக்க இந்த மசோதா பற்றி பேசினார்.
அவர் தனது பேச்சில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ரகசியமாகக் கொண்டு வந்துள்ளார்கள்; எந்த அரசியல் கட்சி தலைவரிடமும் ஆலோசிக்கவில்லை. 1996ல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா திமுக ஆதரவுடன் கொண்டுவரப்பட்டது. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டுவர ஏன் இவ்வளவு கால தாமதம்?
எப்போது மகளிர் இடஒதுக்கீடு சட்டம் அமல்படுத்தப்படும்?. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்வதில் இவ்வளவு ரகசியம் காட்டியது ஏன்? மகளிரை எம்எல்ஏ ஆக்குவது போல அவர்களை தேர்வு செய்யும் உரிமை மகளிருக்கு முழுமையாக வழங்கப்பட வேண்டும். இந்த சட்டத்தை கொண்டு வர பல ஆண்டுகளாக நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம்.
பெண்களை மதிக்கிறோம், அவர்களின் சுதந்திரத்திற்காக பாடுபடுகிறோம் என்ற ஆண்களின் பேச்சுகள் பெண்களை ஏமாற்றும் சூழ்ச்சி மட்டுமே என பெரியார் கூறியதை நினைவுபடுத்துகிறேன். உங்களுக்கு இந்த நாட்டின் மீது எவ்வளவு உரிமை உள்ளதோ, அதேபோல உரிமை எங்களுக்கும் உண்டு. இந்த நாடும், இந்த நாடாளுமன்றமும் எங்களுக்கும் சொந்தம் தான். பெண்களை மதிப்பதுபோல் ஆண்கள் நடந்து கொள்வது ஏமாற்று வேலை.
ஜெயலலிதா வலிமைவாய்ந்த தலைவர்தான்.. அதை ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்று பாரதி கூறியதுதான் இங்கே நினைவிற்கு வருகிறது. தற்போதைய மகளிர் இடஒதுக்கீடு நிபந்தனைகளை கொண்டுள்ளது
இதனால் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், தற்போதைய மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்ப்புதெரிவித்துள்ளார் . மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அரசியலுக்கு பயன்படுத்துகிறது பாஜக, என்று கனிமொழி பேசி உள்ளார்.
சுவாரசியம்: இன்று நாடாளுமன்றத்தில் கனிமொழி பேசிய போது பலரையும் ஒரு விஷயம் அதிகம் ஈர்த்தது. அது அவரின் இருக்கை. இது புதிய நாடாளுமன்றம் என்பதால் 888 பேர் வரை அங்கே அமர முடியும். இதனால் கனிமொழிக்கு வசதியான இருக்கை தரப்பட்டு இருந்தது. எல்லா எம்பிகளுக்கும் இதேபோல் நல்ல இடவசதி கொடுக்கப்பட்டு உள்ளது.
பழைய நாடாளுமன்றத்தில் பெண்கள் ஆண்கள் முண்டியடித்துக்கொண்டு அருகருகே அமரும் சூழ்நிலை இருந்தது. அதனால் பல பெண் எம்பிக்கள் சங்கோஜமாக இருக்கும் நிலை கூட ஏற்பட்டது. ஆனால் இன்று கனிமொழி பேசிய வீடியோவில் அவர் வசதியாக நிற்பதும், அமர்வதும் கண்கூடாக தெரிந்தது. அவையின் இடவசதியால் பெண்கள் சங்கோஜம் இன்றி அமர்வது தெரிந்தது.

புது நாடாளுமன்றம்: 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் இந்த நாடாளுமன்றம் கட்டப்பட்டு உள்ளது. 2019ல் இதற்கான பணிகள் தொடங்கின. 2021, 2022 கொரோனா காலத்திலும் இதற்கான பணிகள் மட்டும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. கொரோனாவை எதிர்கொள்ள போதிய நிதி இல்லாத போது மத்திய அரசு புதிய நாடாளுமன்றம் மற்றும் பிரதமர் இல்லம் கட்ட இவ்வளவு கோடியை செலவு செய்வது விமர்சனங்களை சந்தித்தது.
மேலும் இந்த புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் தமிழ்நாட்டின் 21 ஆதீனங்களின் மடாதிபதிகள் பங்கேற்றனர். 19 எதிர்கட்சிகள் இந்த நிகழ்வை புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications