பார்ட்டி ஹால்.. மருத்துவமனைகளில் செய்யும் செலவையும் உன்னிப்பாக கவனிக்கும் வருமானவரித்துறை!
டெல்லி: தேசிய தலைநகர் டெல்லியில் நேரடி பணப் பரிவர்த்தனையை வருமான வரித்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தற்போது இந்த கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Recommended Video
இதன் தொடர்ச்சியாக மருத்துவமனைகள், பார்டி ஹால்களில் மேற்கொள்ளப்படும் நேரடி பணப்பரிவர்த்தனையை வருமான வரித்துறையினர் கண்காணிக்க தொடங்கியுள்ளனர்.

அளவுக்கு அதிகமான பணப்புழக்கம் டெல்லியையொட்டியுள்ள பகுதிகளில் நடைபெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களையடுத்து இந்த கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லியையொட்டியுள்ள ராஜஸ்தான், மாகராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவு வரி ஏய்ப்பு செய்யப்படுவதாக வருமான வரித்துறையினருக்கு அவ்வப்போது தகவல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. இதனையடுத்து தற்போது அல்வார், கோட்டா மற்றும் ஜல்னா போன்ற சிறிய நகரங்களிலும், மும்பை, ஔரங்காபாத், நாசிக் மற்றும் ஜல்னா ஆகிய பெருநகரங்களிலும் வருமான வரித்துறை தனது கண்காணிப்பை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளது.
மேற்குறிப்பிட்ட அல்வார், கோட்டா மற்றும் ஜல்னா பகுதிகளில் உள்ள ஸ்டீல் பார் உற்பத்தியாளர்களுக்கு சொந்தமான இடங்களில் சமீபத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனைகளில் கணக்கில் வராத ஏராளமான பணம் மற்றும் நகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனையடுத்து இதுபோன்ற முறைகேடுகள் மீண்டும் ஏற்படாமல் தவிர்க்க இந்த தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளதாக IT தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ரொக்கமாக பண பரிவர்த்தனையை மேற்கொள்ள கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மருத்துவமனைகளில் ரொக்கமாக பணம் செலுத்துவோரின் பான் எண்களை கட்டாயம் பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக தொகைகளை செலுத்தும் நபர்களை அடையாளம் காண முடியும் என IT நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. ஆனால் இந்த கட்டுப்பாடுகளை அவ்வளவு எளிதாக மருத்துவமனைகள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில் நோயாளிகள் அவசர சிகிச்சைக்காகவே மருத்துவமனைக்கு வருகின்றனர். அவர்களிடத்தில் பான் எண்ணை பெறுவது எல்லா நேரத்திலும் சாத்தியமாக இருக்காது என்று மருத்துவமனை தரப்பில் வாதிடப்பட்டது.
இதேபோல பாரட்டிகள் நடைபெறும் ஹால்களையும் IT கவனமாக கண்காணித்து வருகிறது. ஆனாலும் இவ்வாறு புக் செய்யப்பட்டு நடத்தப்படும் பார்டிகளுக்க வசூலிக்கப்படும் தொகை குறித்து பில்கள் ஏதும் இருப்பதில்லை என்று சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து உயர்தர கடிகாரங்களை விற்பனை செய்யும் நிலையங்கள், சில்லறை விற்பனை நிலையங்கள் என அனைத்திலும் IT தனது கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.
ஆனாலும் இந்த கண்காணிப்பிலிருந்து பலர் அவ்வப்போது தப்பிவிடுகின்றனர் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். உதாரணமாக கட்டிடக் கலை நிபுணர்களுக்கு எதிராக புகார்களின் அடிப்படையில் சில நடவடிக்கைகள் மேற்கொண்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் இவ்வாறு கட்டிடக்கலை நிபுணர்கள் எல்லோரையும் கண்காணிப்பின் கீழ் கொண்டுவர முடியவில்லை என்பதையும் அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். எப்படியாயினும் தங்களிடம் ஒரு பட்டியல் உள்ளது என்றும் அதன் அடிப்படையில் கண்காணிப்புகளை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications