உங்களுக்கு 62 வயசு.. எனக்கு 50.. கல்யாணம் பண்ணிக்கங்க.. தொந்தரவு செய்த பெண்.. சுட்டு கொன்ற டாக்டர்!
பெண்ணை சுட்டு கொன்று தானும் தற்கொலை செய்துள்ளார் டாக்டர்
டெல்லி: "உங்களுக்கு 62 வயசு.. எனக்கு 50 வயசு.. என்னை கல்யாணம் பண்ணிக்குங்க.." என்று தொந்தரவு செய்து கொண்டே இருந்த பெண்ணை டாக்டர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டார்.. பிறகு அவரும் அதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
டெல்லியில் உள்ள ரோகிணி செக்டார் பகுதியில் ஆஸ்பத்திரி ஒன்றினை வைத்து நடத்தி வருபவர் டாக்டர் குக்ரெஜா. இவரிடம் வேலை பார்த்து வந்தவர் சுதாபா முகர்ஜி.

இந்த நிலையில் ரோகிணி செக்டார்-13 பகுதியில் காருக்குள் டாக்டரும் சுதாபா முகர்ஜியும் ரத்த வெள்ளத்தில் பிணமாக விழுந்து கிடந்தனர். இந்த தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்து இருவரின் சடலங்களையும் மீட்டனர்.
அப்போது, டாக்டர் கையில் ஒரு துப்பாக்கி இருந்தது. பக்கத்திலேயே சுதாபாவின் பிணமும் கிடந்தது. சுதாபாவை டாக்டர் சுட்டு கொன்றுவிட்டு அதன்பிறகு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சந்தேகிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் விசாரணையில் இறங்கினர். உயிரிழந்த டாக்டருக்கு 62 வயது.. கல்யாணமாகி மனைவி மகன், மகள்கள் இருக்கிறார்கள். எனினும், சுதாபா என்ற 50 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.. நெருக்கமும் அதிகமாகி உள்ளது.
இந்த சுதாபாவுக்கும் கல்யாணமாகி கணவனும், ஒரு மகனும் உள்ளனர். ஆனால், தன்னை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று சுதாபா, டாக்டரை அடிக்கடி தொல்லை செய்து வந்துள்ளார். அதற்கு அவர் மறுத்துள்ளதாகவும் தெரிகிறது.
இந்த சமயத்தில், 2 பேரும் ஒரு கல்யாணத்துக்கு போய்விட்டு, காரில் திரும்பி வந்துகொண்டிருந்தனர். அப்போது கல்யாண பேச்சை எடுத்தார் சுதாபா.. இது வாக்குவாதமாக முற்றியது.. காருக்குள்ளேயே சண்டையும் நடந்தது.. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த டாக்டர் குக்ரெஜா, தன் துப்பாக்கியை எடுத்து சுதாபாவை சுட்டுவிட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து காருக்குள்ளேயே உயிரிழந்தார் சுதாபா.. பிறகு தானும் அதே துப்பாக்கியால் சுட்டுகொன்று இறந்துவிட்டார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
கிலோ முந்திரி வெறும் 50 ரூபாயா? இந்தியாவின் ஆச்சரியமான 'முந்திரி கிராமம்' - ஒரு விசித்திரப் பயணம்! -
வாத்தி கம்மிங்.. மீண்டும் டெல்லிக்கு பறக்கும் விஜய்! ’மேலிட’ தலைவர்களை சந்திக்க வாய்ப்பு! பரபர களம்! -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல்












Click it and Unblock the Notifications