டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா காலத்தில் உயரும் உள்நாட்டு விமான கட்டணங்கள் - ஜூன் 1 முதல் அதிகரிப்பு

ஜூன் 1ஆம் தேதி முதல், உள்நாட்டு விமான கட்டணத்தில் குறைந்தபட்ச வரையறையை 13 சதவிகிதத்தில் இருந்து 16 சதவிகிதமாக உயர்த்துவதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்து உள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: நெருக்கடியில் சிக்கியிருக்கும் விமான நிறுவனங்களுக்கு உதவுவதற்காக உள்நாட்டு விமான கட்டணத்தை மத்திய அரசு உயர்த்த முடிவு செய்துள்ளது. ஜூன் 1ஆம் தேதி முதல், உள்நாட்டு விமான கட்டணத்தில் குறைந்தபட்ச வரையறையை 13 சதவிகிதத்தில் இருந்து 16 சதவிகிதமாக உயர்த்துவதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்து உள்ளது.

கொரோனா காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் 25 முதல் உள்நாட்டு விமான சேவை நிறுத்தப்பட்டது. அதன் பின் மே, 25 முதல், குறைந்த பயணிகளுடன் உள்நாட்டு விமானங்கள் மீண்டும் இயங்க அனுமதிக்கப்பட்டது.

Domestic air fares rising during the Corona period - price hikes from June 1

குறைந்த பயணிகளுடன் இயங்குவதால் விமான நிறுவனங்கள் டிக்கெட் கட்டணத்தை அளவிற்கதிகமாக உயர்த்துவதை தடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

40 நிமிட விமான பயணத்திற்கு குறைந்தபட்சம் 2,000 ரூபாயில் இருந்து அதிகப்பட்சமாக 6,000 ரூபாய் வரை மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என விமான போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டது. துாரத்திற்கு ஏற்ப பல நிலைகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டண வரம்பு கடந்த மார்ச் 31 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா தாக்கம் குறையத் தொடங்கவே விமான கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த நிலையில் கொரோனா 2வது அலை காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் விமான போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.

பிஸ்னஸ் கிளாசில் பீதியை கிளப்பிய வௌவால்.. 'ஏர் இந்தியா' விமானம் அவசரமாக தரையிறக்கம்! பிஸ்னஸ் கிளாசில் பீதியை கிளப்பிய வௌவால்.. 'ஏர் இந்தியா' விமானம் அவசரமாக தரையிறக்கம்!

இதனால் விமான நிறுவனங்கள் பெரும் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றன. எனவே நெருக்கடியில் சிக்கியிருக்கும் விமான நிறுவனங்களுக்கு உதவுவதற்காக உள்நாட்டு விமான கட்டணத்தை மத்திய அரசு உயர்த்த முடிவு செய்துள்ளது. அதன்படி ஜூன் 1ஆம் தேதி முதல், உள்நாட்டு விமான கட்டணத்தில் குறைந்தபட்ச வரையறையை 13 சதவிகிதத்தில் இருந்து 16 சதவிகிதமாக உயர்த்துவதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்து உள்ளது.

English summary
The civil aviation ministry has raised the lower limit on airfares by 13 to 16%, in turn paving way for domestic flying to become costlier for travellers. The upper limits have remained unchanged.The increase in fares is set to come into effect from 1 June, according to an official order.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X