வீட்டு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம்.. சட்டம் இயற்ற உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் மறுப்பு
டெல்லி: வீட்டு வேலை செய்யும் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரணை நடத்திய உச்சநீதிமன்ற ‛‛வீட்டு வேலை செய்யும் பணியாளர்களுக்கு குறைந்தப்பட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்யும் வகையில் சட்டம் இயற்ற உத்தரவிட முடியாது'' என்று கூறி வழக்கை முடித்து வைத்தது.
வீட்டு வேலை செய்யும் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை உள்ளது. ஆனால் இந்த கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

இதனால் வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள் முதலாளி கொடுக்கும் சம்பளத்தை தான் பெற வேண்டிய சூழல் உள்ளது. சம்பளம் உயர்த்தி கேட்டு கிடைக்காவிட்டால் அந்த பணியை விட்டு வேறு இடத்தில் தான் வேலை செய்ய வேண்டிய நிலை உள்ளது.
உச்சநீதிமன்றத்தில் மனு
இந்நிலையில் தான் பெண் தொழிலாளர் சங்கங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‛‛நாடு முழுவதும் கோடிக்கணக்கான பெண்கள் வீட்டு வேலை செய்யும் பணியாளர்களாக உள்ளனர். ஆனால் அவர்களுக்கான சம்பள பாதகாப்பு இல்லை. இதனால் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யும் வகையில் சட்டம் இயற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கூறப்பட்டு இருந்தது.
தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை
இந்த பொதுநல மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜோய்மால்யா பக்சி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன் வாதிட்டார்.
அப்போது அவர், ‛‛வீட்டுப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்காதது அவர்களது அடிப்படை உரிமைகளை மீறுவதாகும். வீட்டு பணியாளர்களாக பெண்களே அதிகம் உள்ளனர். அமைப்புசாரா தொழிலாளர்களில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினராக உள்ளனர். இவர்களுக்கு முறையான சட்டப் பாதுகாப்பு இல்லை.
சிங்கப்பூர் போன்ற பல ஆசிய நாடுகளில் வீட்டுப் பணியாளர்களுக்கு கட்டாய விடுமுறை மற்றும் குறைந்தபட்ச சேவை நிபந்தனைகள் போன்ற சட்டப்பூர்வ பாதுகாப்புகள் இல்லாமல் பணிக்கு அமர்த்த முடியாது. இதனால் இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்'' என்று கூறினார்.
உச்சநீதிமன்றம் மறுப்பு
இந்த வாதத்தை கேட்ட பிறகு உச்சநீதிமன்றம் கூறியதாவது: வீட்டு வேலை செய்யும் பணியாளர்களுக்கு குறைந்தப்பட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்யும் வகையில் சட்டம் இயற்ற உத்தரவிட முடியாது.
குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யும் வகையில் தற்போதுள்ள சட்டங்களைத் திருத்தும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட முடியாது. ஏனென்றால் சட்டமியற்றும் துறையின் வரையறைக்குள் நீதித்துறையால் தலையீடு செய்ய முடியாது.
சுரண்டல் இருப்பதாக கவலை
சட்டமியற்றும் அதிகாரத்தில் இருப்போரிடம் அதற்கான சட்டத்தை இயற்ற கேட்காத வகையில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. பெண் தொழிலாளர் சங்கம் வீட்டு பணியாளர்களின் அவல நிலையை சம்பந்தப்பட்ட மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து எடுத்துரைக்க வேண்டும். ஏனென்றால் உழைப்பு சுரண்டல் இருப்பது உண்மை தான். ஆனால் சுரண்டலை கையாள்வதற்கு வேறு பல வழிகள் உள்ளன.
மக்கள் தங்கள் தனிப்பட்ட உரிமைகள் பற்றி இன்னும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இன்னும் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும் அரசுகள் இதுபோன்ற உழைப்பு சுரண்டலை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம்.
தொழிற்சங்கம் மீது விமர்சனம்
அதுமட்டுமின்றி ஒருமுறை குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட்டால் சிலர் அவர்களை வேலைக்கு அமர்த்த மறுக்கலாம். அதுமட்டுமின்றி ஒவ்வொரு குடும்பமும் வழக்குக்குள் இழுக்கப்படும். இந்த பணியை தொழிற்சங்கங்கள் செய்யும். இந்த நாட்டில் தொழிற்சங்கங்கங்கள் தொழில்துறை வளர்ச்சிக்கு பெரிய தடையாக இருந்துள்ளது. தொழிற்சங்கங்களை பயன்படுத்தி எத்தனை தொழில்களில் ஆட்கள் நியமிக்கப்பட்டனர் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்?
உண்மையை நாம் அறிய வேண்டும். நாட்டின் பாரம்பரிய தொழில்கள் அனைத்தும் தொழிற்சங்கங்களால் மூடப்பட்டு விட்டன. அவர்கள் வேலை செய்ய விரும்பவில்லை. இந்த தொழிற்சங்க தலைவர்கள்தான் நாட்டின் தொழில்துறை வளர்ச்சியைத் தடுத்து நிறுத்துவதற்கான பொறுப்பாக உள்ளனர்'' என்று கூறி வழக்கை முடித்து வைத்தது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications