வாழ்நாள் முழுவதும் வெள்ளி மங்கை மீராபாய் சானுவிற்கு இலவச பீட்சா.. டொமினோஸ் சர்பிரைஸ்!
டெல்லி: ஒலிம்பிக் போட்டியில் பளு தூக்கும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய மங்கை மீராபாய் சானுவிற்கு வாழ்நாள் முழுவதும் இலவச பீட்சா வழங்குவதாக டொமினோஸ் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
Recommended Video
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 23 ஆம் தேதி தொடங்கின. இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த 127 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
போட்டி தொடங்கிய முதல் நாளே மகளிருக்கான 49 கிலோ பளுதூக்குதல் பிரிவு போட்டியில் இந்தியாவிலிருந்து பங்கேற்ற ஒரே வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

ஒலிம்பிக் போட்டி
2000ஆம் ஆண்டு கர்னம் மல்லேஸ்வரி ஒலிம்பிக்கில் பளுதூக்குதல் போட்டியில் வெண்கலம் வென்றார். அதன் பின்னர் ஒலிம்பில் பளுதூக்குதலில் வெள்ளி வென்ற முதல் இந்திய வீராங்கனை சானு ஆவார். மொத்தம் 202 கிலோ (87கிலோ ஸ்நாட்ச், 115கிலோ க்ளீன் ஜெர்க்) தூக்கி 4 விதமான முயற்சிகளிலும் அசத்தி வெள்ளியை உறுதி செய்துள்ளார்.

ரியோவில் தோல்வி
2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் தோல்வி அடைந்த சானு தற்போது வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார். ஒலிம்பிக் போட்டியின் போது அவரிடம் "நீங்கள் வந்த வேலையும் (பதக்கம் வெல்ல வந்த வேலை) உங்கள் நிகழ்ச்சியும் முடிந்து விட்டதே. இனி என்ன செய்வீர்கள்" என கேட்டனர்.

பீட்சா பிடிக்கும்
அதற்கு மீராபாய், எனக்கு மிகவும் பிடித்த பீட்சாக்களை சாப்பிடுவதில் நேரத்தை செலவிடுவேன் என்றார். அனைவருக்கும் சர்பிரைஸாக இருந்த இந்த பதிலை டொமினோஸ் பீட்சாவும் கேட்டது. இதையடுத்து அந்த பீட்சா நிறுவனம் டிவிட்டரில் சனிக்கிழமை ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.

சானுவுக்கு இலவச பீட்சா
அதில் தாய்நாட்டுக்காக வெள்ளிப்பதக்கம் வென்ற சானுவுக்கு வாழ்த்துகள். கோடிக்கணக்கான இந்தியர்களின் கனவை நீங்கள் நனவாக்கிவிட்டீர்கள். உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பீட்சா கொடுக்காவிட்டால் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்காது. மீண்டும் ஒரு முறை வாழ்த்துகளுடன்" என டொமினோஸ் தெரிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications