Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுகவை விமர்சிக்காதீங்க.. தமிழக பாஜகவை கண்டித்த 'டெல்லி'..பின்னணியில் இப்படி ஒரு பிளானாமே!

அதிமுக தலைமை பற்றியோ அக்கட்சி தொண்டர்கள் குறித்தோ எதுவும் குறை கூறி பேசவேண்டாம் என்று பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அதிமுக பாஜக கூட்டணி இடையே லேசான மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அதிமுகவுடன் நாம் (பாஜக) சுமூக உறவை வைத்துக்கொள்ள வேண்டும். அதிமுக தலைமை பற்றியோ அக்கட்சி தொண்டர்கள் குறித்தோ எதுவும் குறை கூறி பேசவேண்டாம். தமிழக பாஜக நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் இதனை பின்பற்ற வேண்டும் என்று பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாஜகவின் மாநில தகவல் தொழில்நுட்ப செயலாளராக இருந்த சி.டி நிர்மல் குமார் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை இணைத்துக்கொண்டார்.

அவரைத் தொடர்ந்து பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் அடுத்தடுத்து இணையும் படலம் நடைபெற்று வந்தது. அதுவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை காட்டமாக விமர்சித்ததும் பாஜகவினர் மத்தியில் புகைச்சலை உண்டாக்கியது.

ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு

ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு

அதிருப்தியால் கட்சி தாவுவது சகஜம் என்றாலும், கூட்டணிக் கட்சியான பாஜகவில் இருந்து வந்த நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமியே நேரடியாக வரவேற்றது பாஜகவினருக்கு கொஞ்சம் அதிர்ச்சி கொடுத்தது என்றே சொல்லப்படுகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின்போதே அதிமுக - பாஜக இடையே லேசான உரசல் வெளிப்பட்டதை காண முடிந்தது. பாஜக தலைவர் அண்ணாமலையும் நேரடியாக இவ்விவகாரம் தொடர்பாக பேசினார். பா.ஜ.க. நிர்வாகிகளை அழைத்து கட்சி நடத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு எனவும் காட்டமாக பேசினார்.

அதிமுக-பாஜக கூட்டணியில் சலசலப்பு

அதிமுக-பாஜக கூட்டணியில் சலசலப்பு

மேலும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை பா.ஜ.க.வினர் எரித்து போராட்டம் நடத்தினார்கள். இதனால், அதிமுக - பாஜக நிர்வாகிகள் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதனால், அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் தான் கூட்டணி என்றும் அதிமுக மூத்த தலைவர்கள் வெளிப்படையாகவே பேசி கூட்டணி முறிய இருப்பதாக வெளியான தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்து இருந்தனர்.

ஜே பி நட்டா அறிவுறுத்தல்

ஜே பி நட்டா அறிவுறுத்தல்

இந்த அறிவிப்புக்கு பிறகு கூட பாஜக நிர்வாகிகள் சிலர் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்ததை பார்க்க முடிகிறது. இதனிடையே, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கடந்த 10-ந்தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு தமிழக பாஜக நிர்வாகிகளை தனியாக சந்தித்து ஜேபி நட்டா ஆலோசனை நடத்தினார். அப்போது பாஜக நிர்வாகிகளுக்கு சில அறிவுறுத்தல்களையும் விடுத்ததாக சொல்லப்படுகிறது.

சுமூக உறவை வைத்துக்கொள்ள வேண்டும்

சுமூக உறவை வைத்துக்கொள்ள வேண்டும்

அதாவது, அதிமுகவுடன் நாம் (பாஜக) சுமூக உறவை வைத்துக்கொள்ள வேண்டும். அதிமுக தலைமை பற்றியோ அக்கட்சி தொண்டர்கள் குறித்தோ எதுவும் குறை கூறி பேசவேண்டாம். தமிழக பாஜக நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் இதனை பின்பற்ற வேண்டும். மீறி நடக்கக் கூடாது" என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை கண்டிப்புடன் கூறினாராம். ஜேபி நட்டாவின் இந்த பேச்சு மூலம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி தொடரும் என்பது உறுதியாகி இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறும் கருத்தாக உள்ளது.

அண்ணாமலையை விமர்சித்த கடம்பூர் ராஜூ

அண்ணாமலையை விமர்சித்த கடம்பூர் ராஜூ

அதிமுக - பாஜக நிர்வாகிகள் இடையேயான கருத்துமோதல்கள் கடந்த சில நாட்களாக அடங்கியிருந்த நிலையில் நேற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, அண்ணாமலை குறித்து விமர்சித்ததும் அவருக்கு பதிலடியாக தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பேசியதும் மீண்டும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றது. கடம்பூர் ராஜூ, அண்ணாமலையை ஒரு கத்துக்குட்டி என்றும் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர் டெபுடேஷனில் வந்திருப்பதாகவும் ஆட்சி மாற்றம் வந்தால் மீண்டும் காவல்துறைக்கு திரும்பி விடுவார் என்றும் விமர்சித்தார்.

நாராயணன் திருப்பதி பதிலடி

நாராயணன் திருப்பதி பதிலடி

இதற்கு உடனடியாக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ட்விட்டரில் காட்டமாக எதிர்வினையாற்றினார். நாராயணன் திருப்பதி கூறுகையில், அண்ணாமலை அவர்கள் டெபுடேஷனில் அரசியலுக்கு வந்திருப்பதாகவும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மீண்டும் காவல்துறைக்கு திரும்பி விடுவார் என்றும் அவன், இவன் என்ற ஏக வசனத்தில் பேசியுள்ளதோடு, அரசியலில் கத்துக்குட்டி என்றும் விமர்சித்து பேசியிருப்பது அரசியல் அநாகரீகத்தின் வெளிப்பாடு. டெபுடேஷனில் அரசியலில் இருப்பது அதிமுகதான் என்பதை கடம்பூர் ராஜூ உணர வேண்டும்.

கடம்பூர் ராஜூ அரசியல் கத்துக்குட்டி

கடம்பூர் ராஜூ அரசியல் கத்துக்குட்டி


தமிழகத்தில் லஞ்ச, ஊழலை ஒழித்து கட்டி, நாகரீக அரசியலுக்கான மாற்றத்தை உருவாக்க தான் திரு.அண்ணாமலை அவர்களின் அரசியல் பிரவேசம் என்று கடம்பூர் ராஜு போன்ற அரசியல் கத்துக்குட்டிகளுக்கு தெரியாதது வியப்பல்ல. கட்சியை அண்ணாமலை அவர்கள் காலி செய்து விடுவார் என்று சொல்லும் கடம்பூர் ராஜு அவர்களே, எங்கள் கட்சியை நாங்கள் பார்த்து கொள்கிறோம். காலியாகிக் கொண்டிருக்கும் உங்கள் கட்சியை நீங்கள் கவனமாக பார்த்து கொள்ளுங்கள்" என மிகக் கடுமையாகவே பதிலடி கொடுத்தார்.

இதுதான் டெல்லியின் விருப்பம்

இதுதான் டெல்லியின் விருப்பம்

அதிமுக - பாஜக நிர்வாகிகள் இடையே சில சில கருத்து மோதல்கள் இருந்தாலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி நீடிப்பதையே டெல்லி தலைமை விரும்புவதால், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளின் இந்த மோதல்கள் தேர்தல் கூட்டணியை பங்கம் செய்யாது என்றே அரசியல் வட்டாரத்தில் பேசும் கருத்தாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+