லாக்டவுனை நீர்த்து போக செய்ய வேண்டாம்.. கேரளாவின் ஊரடங்கு தளர்வுக்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு
டெல்லி: இன்று முதல் உணவகங்களையும் புத்தகக் கடைகளையும் அனுமதிக்கும் கேரளாவின் முடிவு கொரோனா வைரஸ் லாக்டவுனை மீறும் வகையில் உள்ளதாக உள்துறை அமைச்சகம் இன்று கேரள அரசுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது. நகரங்களுக்கு இடையே பேருந்து பயணத்தை அனுமதிப்பது அரசு தவறு என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
கேரளாவில் இன்று பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது. காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய, சிவப்பு மண்டலத்தில் உள்ள நான்கு மாவட்டங்களை தவிர பிற பகுதிகளில் பெரும்பாலான சேவைகள் திரும்பி உள்ளது.

காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம் தவிர பிற, மாவட்டங்களுக்குள் ஒற்றைப்படை மற்றும் இரட்டைப் படை திட்டத்தில் தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது.
மேலும் உணவகங்களில் உட்கார்ந்து சாப்பிட இரவு 7 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.. பார்சல் வாங்கிச் செல்ல இரவு 8 மணி வரை அனுமதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டங்களுக்குள், குறுகிய தூரங்களுக்கு பேருந்து பயணமும் அனுமதிக்கப்பட்டுள்ளது.. இந்த அனைத்து சேவைகளுக்கும் கடுமையான சமூக விலகல் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று கேரளா அரசு அறிவுறுத்தி அறிவிக்கை வெளியிட்டது.
உள்ளூர் தொழிற்சாலைகள் முடிதிருத்தும் கடைகள், கார்களின் பின் இருக்கையில் இரண்டு பயணிகள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் ஒருவர் பயணிக்கலாம் போன்றவை அனுமதிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய உள்துறை அமைச்சகம் கேரள அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் கேரளாவின் ஊரடங்கு தளர்வு நடவடிக்கை மத்திய அரசின் வழிகாட்டுதலுக்கு எதிரானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த ஊரடங்கு தளர்வு கொரோனா தடுப்பு நடவடிக்கையை நீர்த்து போகச் செய்யும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உணவகங்களை திறக்க அனுமதிப்பது, புத்தக கடைகளை அனுமதிப்பது, பேருந்து பயணத்தை அனுமதிப்பது தவறு என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications