மேஜையை ஆக்ரோஷமாக தட்டிய ராகுல் காந்தி.. பொதுச்சொத்தை உடைக்காதீங்க என Sorry கேட்க வைத்த ஓம்பிர்லா!
டெல்லி: ‛ஆபரேஷன் சிந்தூர்' குறித்த விவாதத்தின்போது லோக்சபா எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி நேற்று ஆக்ரோஷமாக நாடாளுமன்றத்தில் பேசினார். அப்போது அவர் திடீரென்று மேஜையை தட்டிய நிலையில் சபாநாயகர் ஓம்பிர்லா லோக்சபா சொத்தை உடைக்காதீங்க என்று கூறினார். இதையடுத்து ராகுல் காந்தி தான் மேஜையில் தான் தட்டிய இடத்தை தொட்டு sorry சார் என்று கூறினார்.
நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நேற்று நடந்தது. இந்த விவாதத்தில் ராகுல் காந்தி நேற்று பேசினார். மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.

பஹல்காமில் நடந்தது ஒரு கொடூரமான தாக்குதல். பாகிஸ்தான் அரசால் தெளிவாகத் திட்டமிடப்பட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதல் தொடர்பாக அனைவரும் சேர்ந்து பாகிஸ்தானை கண்டித்தோம்.
1971 போரை ஆபரேஷன் சிந்தூர் உடன் ராஜ்நாத்சிங் ஒப்பிட்டார். ஆனால், அன்றைய காலக்கட்டத்தில் அரசியல் தலைமையிடம் முழு துணிச்சல் இருந்தது. 1971ல் ஜெனரல் மனோக் ஷாவுக்கு அப்போதைய பிரதமர் இந்திர காந்தி முழு சுதந்திரம் அளித்தார். ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுத்தன பலனாக பாகிஸ்தான் படைகள் சரணடைந்தன. ஆனால், இப்போது நடந்ததே வேறு.
ஆபரேஷன் சிந்தூர் நடக்கும்போதே பாகிஸ்தானை தொடர்பு கொண்டதாக ராஜ்நாத் சிங் கூறினார்.. பாகிஸ்தானை தொடர்பு கொண்டு ராஜ்நாத் சிங் கூறியது அதிர்ச்சி தருகிறது.. இந்தியாவின் வியூகங்களைப் பாகிஸ்தானிடம் முன்கூட்டியே சொல்லிவிட்டீர்கள்.. ஆபரேஷன் சிந்தூரின்போது அரசின் செயல்பாடுகளே விமானப்படைக்கு பின்னடைவாக அமைந்தது.
பாகிஸ்தான் தாக்குதலை அண்டை நாடுகள் யாரும் கண்டிக்கவில்லை. அந்த நாடுகள் இந்தியாவையும், பாகிஸ்தானையும் ஒன்றாக பார்க்கின்றன. இதுதான் இன்றைய வெளியுறவுத்துறையின் செயல்பாடாக உள்ளது. இந்த சம்பவங்கள் நடந்தபிறகு அமெரிக்க அதிபர் டிரம்ப், அசீம் முனீரை அழைத்து பேசுகிறார். டிரம்ப் பொய்யர் என்று சொல்ல முடியுமா?'' என ஆக்ரோஷமானார்.
அப்போது சவால் விடுக்கும் வகையில் திடீரென்று ராகுல் காந்தி தனது மேஜையை ஆக்ரோஷமாக தட்டினார். இதை பார்த்த லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, ‛‛சபையின் சொத்தை உடைக்காதீங்க'' என்று கூறினார். அதை கேட்டவுடன் ராகுல் காந்தி, Sorry Sir.. என்று கூறி மேஜையில் தான் தட்டிய இடத்தை தொட்டு பேச்சை தொடர்ந்தார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications