பொறுக்கவே முடியாது.. குழந்தைகளை தூக்கி வைத்து பிரச்சாரம் செய்யக்கூடாது.. தேர்தல் ஆணையம் ஆர்டர்!
டெல்லி: நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் தொடர்பான எந்தவொரு பணிகளிலும் குழந்தைகள், சிறுவர்களை ஈடுபடுத்தக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது.
மக்களவை தேர்தல் அட்டவணை பிப்ரவரி கடைசி வாரம் அல்லது மார்ச் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலையொட்டி, நாடு முழுவதும் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் பணி கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளது. வரும் ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், லோக்சபா தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. மக்களவை தேர்தலின்போது தேர்தல் பணிகளில் குழந்தைகள், சிறுவர்களை பயன்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் தொடர்பான எந்தவொரு பணிகளிலும் குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது. சுவரொட்டிகள் ஒட்டுதல், துண்டு பிரசுரம் விநியோகித்தல், முழக்கம் எழுப்புதல், பேரணிகளில் பங்கேற்க வைத்த போன்ற பணிகளில் குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், தேர்தல் பிரச்சார வாகனங்களில் குழந்தைகளை ஏற்றிச் செல்லக் கூடாது என்றும், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள், குழந்தைகளை கையில் தூக்கிச் செல்வது, பிரச்சாரம் செய்வது ஆகியவற்றில் ஈடுபடக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவை மீறி தேர்தல் பரப்புரையில் சிறுவர்களை பயன்படுத்துவது தேர்தல் விதிமீறல் என்பதால் குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அதேசமயம், பெற்றோருடன் குழந்தைகள், தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பங்கேற்பது விதிமீறல் அல்ல என்றும் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications