Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓவர் டைம்க்கு இரட்டை சம்பளம்.. இந்தியாவில் அமலானது 4 புதிய தொழிலாளர் சட்டங்கள்! சிறப்பம்சங்கள் இதோ

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடு முழுவதும் பணியாற்றி வரும் தொழிலாளர்களின் நலன்களை காக்கும் வகையில் நம் நாட்டில் 4 புதிய தொழிலாளர் சட்ட தொகுப்புகள் இன்று மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகள் என்பது ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சமஊதியம் வழங்கவும், ஓவர் டைம் பணியாற்றும் ஊழியர்களுக்கு இரட்டை சம்பளம் வழங்குவது உள்பட பல்வேறு நலன்களை வழங்க உள்ளது. அதுபற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

மத்திய அரசு சார்பில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதிதாக 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளை (New Labour Code) மத்திய அரசு இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

labour law labour code Union Goverment

அதாவது தொழிலாளர் ஊதியச் சட்டம் 2019, தொழில்துறை தொடர்புகள் சட்டம் 2020, சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2020 மற்றும் தொழில்முறைப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணியிடச் சூழல் சட்டம் 2020 உள்ளிட்டவை தான் அந்த புதிய தொழிலாளர் சட்ட தொகுப்புகளாகும்.

ஏற்கனவே நடைமுறையில் இருந்த பல்வேறு தொழிலாளர் சட்டங்கள் என்பது நம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு அல்லது சுதந்திரம் அடைந்த பிறகு சிறிது காலத்தில் இயற்றப்பட்டவையாக உள்ளன. இது தற்போதைய சூழலில் சிக்கல் நிறைந்தாகவும், தனித்தனி பிரிவாகவும் உள்ளன. இதனை தற்போதைய காலத்துக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி இந்த 4 சட்ட தொகுப்புகள் ஏற்கனவே நம் நாட்டில் நடைமுறையில் இருந்த 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து நான்கு சட்டங்களாக மாற்றி கொண்டு வரப்பட்டுள்து. தொழிலாளர் நலன் சார்ந்த விதிகளை மேம்படுத்தி தொழிலாளர்களை பாதுகாப்பது, பணியிட சூழலில் அவர்களுக்கு சீரமைப்பை கொண்டு வருவது, பணிப்பாதுகாப்பை கொண்டு வருவது உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்த சட்ட தொகுதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த 4 புதிய சட்ட தொகுப்புகள் தொழிலாளர்களுக்கு பல்வேறு உத்தரவாதங்களை வழங்குகிறது. இதுதொடர்பாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

மோடி அரசு ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் நியாயமான கண்ணியத்தை வழங்கும் நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் இன்று புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. இந்த சட்டங்கள் கீழ்கண்டவற்றை உறுதி செய்ய உள்ளன.

* அதன்படி அனைத்து தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்ய உள்ளது.

* இளைஞர்களுக்கு பணி நியமன கடிதங்களை வழங்க உத்தரவாதம் அளிக்கிறது

* பெண்களுக்கு சமஊதியம் வழங்க வழிவகை செய்கிறது.

* 40 கோடி தொழிாலளர்களுக்கு சமூக பாதுகாப்பு உத்தரவாதம் வழங்குகிறது

* ஒரு ஆண்டு வேலைக்கு நபிறகு ஊழியர்களுக்கு பணிக்கொடைக்கான உத்தரவாதத்தை வழங்குகிறது

* 40 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்குஆண்டுதோறும் உடல்நல பரிசோதனைகளை வழங்குகிறது

* ஓவர் டைம் பணியாளர்களுக்கு இரட்டை ஊதியம் வழங்க வழிவகுத்து கொடுக்கிறது

* அபாயகரமானதாக அடையாளம் காணப்பட்டுள்ள துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு 100 சதவீத சுகாதார பாதுகாப்பை வழங்குகிறது

* சர்வதேச தரத்தின்படி தொழிலாளர்களுக்கு சமூக நீதியை வழங்குவதை உறுதி செய்கிறது

இந்த சீர்த்திருத்தங்கள் சாதாரண மாற்றங்கள் மட்டுமில்லை. தொழிலாளர் நலனுக்கான பிரதமர் நரேந்தரி மோடி எடுத்த முக்கிய நடவடிக்கையாகும். இந்த புதிய தொழிலாளர் சீர்த்திருத்தம் னெ்பத சுயசார்பு இந்தியாவை நோக்கிய பயணத்தில் முக்கிய படிநிலையாகும். 2047 ம் ஆண்டில் வளர்ந்தஇந்தியாஎன்ற இலக்கை அடைய இது புதிய உத்வேகத்தை அளிக்கும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தொழிலாளர் சட்டங்கள் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கான ஊதியங்களை வழங்க வழிவகை செய்கிறது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+