அக்னி-5 ஏவுகணை, பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை.. ஜன. 26-ல் அணிவகுக்க காத்திருக்கும் அலறவிடும் தளவாடங்கள்!
டெல்லி: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கிய பல முக்கியமான அமைப்புகள் / தொழில்நுட்பங்களை ஜனவரி 26 அன்று நடைபெறும் 75-வது குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற உள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது: தற்சார்பு இந்தியா திட்டங்களின்படி செயல்படும் அமைப்பு என்ற வகையில், பாதுகாப்பு ஆராய்ச்சியின் முக்கியப் பகுதிகளில் டிஆர்டிஓவின் பெண் விஞ்ஞானிகளின் மதிப்புமிக்கப் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. 'நிலம், காற்று, கடல், இணையவெளி, விண்வெளி ஆகிய 5 பரிமாணங்களிலும் பாதுகாப்புக் கேடயத்தை வழங்குவதன் மூலம் தேசத்தைப் பாதுகாப்பதில் மகளிர் சக்தி' என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு டிஆர்டிஓ அணிவகுப்பு வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் பெண்களின் ஈடுபாடு இந்த அணிவகுப்பு வாகனத்தில் முக்கியமாக முன்னிலைப்படுத்தப்படும். தலைசிறந்த விஞ்ஞானி திருமதி சுனிதா தேவி ஜெனா இப்படைப்பிரிவின் தளபதியாக இருப்பார்.
மனிதர்களால் இயக்கப்படும் சிறிய டேங்க் எதிர்ப்பு ஏவுகணை, செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை
அக்னி-5 தரையில் இருந்து தரை இலக்கைத் தாக்கும் அணு ஆயுத ஏவுகணை
மிகக் குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்பு
குறுகிய தூர கடற்படை கப்பல் எதிர்ப்பு ஏவுகணை
'ஹெலினா' எனும் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை
அஸ்த்ரா, இலகுரக போர் விமானம்- 'தேஜஸ்'
மேம்பட்ட மின்னணுப் போர் அமைப்பு - 'சக்தி'
சைபர் பாதுகாப்பு அமைப்புகள்
கட்டளை கட்டுப்பாட்டு அமைப்புகள்
செமி கண்டக்டர் ஃபேப்ரிகேஷன் வசதி
உள்ளிட்டவை டிஆர்டிஓ அணிவகுப்பு வாகனத்தில் இடம்பெற உள்ளன.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications