இந்தியாவின் இளம் குடியரசு தலைவராகும் திரௌபதி முர்மு! பெற்ற வாக்குகளை எவ்வளவு தெரியுமா? முழு தகவல்
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் நாட்டின் இளம் குடியரசுத் தலைவர் என்ற பெயரைத் திரௌபதி முர்மு பெற்றுள்ளார்.
குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. புதிய குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்யக் கடந்த ஜூலை 18ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது.
இதில் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார். எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா களமிறங்கினர்.

குடியரசுத் தலைவர் தேர்தல்
கடந்த ஜூலை 18ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் மட்டுமின்றி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், பிஜு ஜனதா தளம், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகளும் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு அளித்தன. இதனால் திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் தேர்தலில் மிக எளிதாக வெற்றி பெறுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

திரௌபதி முர்மு
இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. எதிர்பார்த்ததை காட்டிலும் திரௌபதி முர்மு அதிக வாக்குகளைப் பெற்றார். இதனால் மூன்றாம் சுற்றிலேயே 50%க்கும் அதிகமான வாக்குகளை பெற்றார். இதன் மூலம் நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதையடுத்து பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இளம் ககுடியரசு தலைவர்
ராம்நாத் கோவிந்திற்கு பின்னர், நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்க உள்ள திரௌபதி முர்மு, ஒடிசாவில் ஒரு கவுன்சிலராக பொது வாழ்க்கையைத் தொடங்கியவர். 64 வயதாகும் இவர் இந்தியாவின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர் என்ற பெயரைப் பெற்றுள்ளார். குடியரசுத் தலைவர் பதவி வகிக்கும் இரண்டாவது பெண் என்ற சிறப்பையும் பெற்றுள்ள, இவர் தான் இந்தியாவின் இளம் குடியரசுத் தலைவர் என்ற சிறப்பையும் பெறுகிறார்..
Recommended Video

சுதந்திரத்திற்குப் பின்னர்
வரும் ஜூலை 25ஆம் தேதி நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராகத் திரௌபதி முர்மு பதவி ஏற்க உள்ளார். இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் பிறந்த முதல் குடியரசுத் தலைவராகத் திரௌபதி முர்மு இருக்கப் போகிறார். மூன்றாவது சுற்று முடிவில் திரௌபதி முர்முவுக்கு 2161 வாக்குகள் கிடைத்தன. எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் எஸ்வந்த் சின்ஹாவுக்கு 1058 வாக்குகள் கிடைத்துள்ளன. அதாவது திரௌபதி முர்மு பெற்ற வாக்குகளின் மதிப்பு 5,77,777 ஆகும். அதேபோல யஷ்வந்த் சின்ஹா பெற்ற வாக்குகள் மதிப்பு 2,61,062 ஆகும்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications