ரூ 2000 கோடி போதை பொருள் கடத்தல் வழக்கு.. ராஜஸ்தானில் ஜாபர் சாதிக் கைது
டெல்லி: ரூ 2000 கோடி மதிப்பிலான போதை பொருள்களை கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வைத்து கைது செய்யப்பட்டார்.
டெல்லியில் உள்ள மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் மேற்கு டெல்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடத்திய சோதனையின் போது போதை பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் ரூ 2 ஆயிரம் கோடி மதிப்பிலான 50 கிலோ ரசாயன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் மூளையாகச் செயல்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக்கை விசாரிக்க முயன்ற போது அவர் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து அவர் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
அவரது 8 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. மேலும் அவரது சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோரையும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடி வருகிறார்கள். இதனிடையே அவர்கள் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள்களை சேர்க்க நிதியுதவி செய்ததாகவும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜாபர் சாதிக்கின் இருப்பிடத்தை நேற்றைய தினம் தமிழக போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் கண்டறிந்ததாக தெரிகிறது.
இதையடுத்து தமிழக அதிகாரிகளின் தகவலை அடுத்து டெல்லி என்சிபி (போதை பொருள் தடுப்பு அதிகாரிகள்) ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் பதுங்கியிருந்த ஜாபர் சாதிக்கை கைது செய்தனர். அவரை விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. அது போல் அவர் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் தெரிகிறது.
கடந்த 2 ஆண்டுகளில் 4500 கிலோ போதை பொருள்களை கடத்தியதாக ஜாபர் சாதிக் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. டெல்லி, சென்னையில் போதை பொருள் கடத்தலில் ஜாபர் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப் பொருட்களை (சூடோபெட்ரின்), தேங்காய் பவுடர் மற்றும் ஹெல்த் மிக்ஸ் (சத்து மாவு) பாக்கெட்களில் மறைத்து வைத்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக, டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டிருந்தாலும் ஜாபர் சாதிக் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வார் என அஞ்சப்பட்டது. ஆனால் அவரை அப்படி எங்கும் தப்பவிடாமல் ஜெயப்பூரில் வைத்தே டெல்லி என்சிபி அதிகாரிகள் தமிழக போலீஸாரின் உதவியுடன் கைது செய்தனர். இந்த கைது குறித்து முழு விவரங்களை மதியம் 2 மணிக்கு மேல் சொல்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications