Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடுவானில் பெங்களூர் விமானத்தை நெருங்கிய எமிரேட்ஸ் விமானம்.. மிக பெரிய விபத்து தவிர்ப்பு! பகீர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பெங்களூரை நோக்கி வந்து கொண்டிருந்த எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் உட்பட இரு விமானங்கள் நடுவானில் மோதும் சம்பவத்தில் இருந்து நூலிழையில் தப்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பொதுவாக விமானங்களில் அதிகபட்ச பாதுகாப்பு முன்னெச்சரிக்கை பின்பற்றப்படும். விமானங்கள் பறக்கும் போது, அவற்றுக்கு வழிகாட்டப் பல அதிநவீன தொழில்நுட்பங்கள் உதவும். மேலும், ஒரு விமானம் எந்த நாட்டின் மீது பறக்கிறதோ அந்த நாட்டின் சிவில் ஏவிஷேயன் கட்டுப்பாட்டு அமைப்பும் அவர்களுக்கு உதவுவார்கள்.

Dubai Emirates and Ethiopian flight en route to Bangalore narrowly avoids collision at Somaliland

இருப்பினும், அதையும் தாண்டி சில நேரங்களில் விமானங்கள் மோதும் சூழல் ஏற்படும். அப்படியொரு மோசமான சம்பவம் தான் ஆப்ரிக்காவில் ஏற்பட்டுள்ளது இது தொடர்பாக சோமாலிலாந்து சிவில் ஏவியேஷன் மற்றும் ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது.

நூலிழையில் தப்பிய விமானம்: எமிரேட்ஸ் போயிங் 777 மற்றும் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் போயிங் 737 மேக்ஸ் ஆகியவை சோமாலிலாந்தின் மீது பறக்கும் போது நடுவானில் மோதும் சூழல் ஏற்பட்டதாகவும் அந்த விபத்து நூலிழையில் தப்பியதாகவும் சோமாலிலாந்து சிவில் ஏவியேஷன் மற்றும் ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 24ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

ஒரு மாதத்திற்கு முன்பு தான் இதே வான்வெளியில் மற்ற இரண்டு விமானங்கள் மோதும் சூழல் ஏற்பட்டு இருந்தது. இப்போது ஒரு மாதம் கழித்து மீண்டும் அதே பிராந்தியத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. இது அந்த பிராந்தியத்தின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுத் திறன் குறித்த கேள்விகளை எழுப்புவதாக உள்ளதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

பெங்களூர் செல்லும் விமானம்: கடந்த மார்ச் 24ஆம் தேதி நடந்த சம்பவத்தில் துபாய் செல்லும் எமிரேட்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான EK722 விமானமும் பெங்களூர் செல்லும் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் ET690 நடுவானில் மோத இருந்தது. அன்றைய தினம் உள்ளூர் நேரப்படி 00:43க்கு இந்த இரண்டு விமானமும் 37,000 அடி உயரத்தில் பறந்து வந்த நிலையில், அவர்கள் ஒரே இடத்தில் சந்திக்கும் சூழல் உருவாகி இருந்தது.

இது குறித்து சோமாலிலாந்து சிவில் ஏவியேஷன் மற்றும் ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், "இரண்டு விமானங்களும் ஒரே நேரத்தில் மற்றும் ஒரே இடத்தில் சந்திப்பது போல இயங்கப்பட்டது. இருப்பினும், சோமாலிலாந்து விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் தலையிட்டு எத்தியோப்பிய விமானக் குழுவினருடன் இணைந்து பேரழிவைத் தவிர்க்க ஒத்துழைத்தனர்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

முதல் முறை இல்லை: கடைசி நேரத்தில் எத்தியோப்பியன் விமானிகள் விமானத்தை 39,000 அடிக்கு உயர்த்தி உள்ளனர். இதன் மூலம் மோசமான விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. அங்கே விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் தந்த முரண்பட்ட தகவல்களே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. அதேநேரம் இதுபோன்ற சம்பவம் நடப்பது முதல்முறை இல்லை. ஆப்பிரிக்காவில் அந்த குறிப்பிட்ட பகுதியில் பறக்கும் போது இந்தாண்டில் மட்டும் விமானங்களுக்கு இதுபோல பல முறை முரண்பட்ட தகவல்கள் கிடைத்துள்ளதாம்.

Dubai Emirates and Ethiopian flight en route to Bangalore narrowly avoids collision at Somaliland

என்ன பிரச்சினை: ஆப்பிரிக்காவில் உள்ள சோமாலியாவில் தங்களை தாங்களே தனி நாடாக அறிவித்துக் கொண்ட பிராந்தியம் தான் சோமாலிலாந்து. சர்வதேச அளவில் இதற்கு அங்கிகாரம் கிடைக்கவில்லை. இந்த சோமாலிலாந்து தனது சொந்த வான்வெளியின் சுதந்திரமான நிர்வாகத்தைக் கோருவதால், இரு தரப்பிற்கும் இடையே மோதல்கள் தொடர்கிறது. இந்த பகுதியை சோமாலியா சிவில் ஏவியேஷன் ஆணையம் நிர்வாகிக்கும் என்ற சர்வதேச விதி இருக்கும் போதிலும் இங்கே குழப்பம் தொடர்கதையாகி வருகிறது.

அதாவது இந்த பகுதியில் பறக்கும் விமானங்களைச் சோமாலியா சிவில் ஏவியேஷன் ஆணையம் நிர்வகிக்க வேண்டும் என்ற போதிலும் சோமாலிலாந்து தன்னை தனி நாடாக அறிவித்துள்ளது. இதனால் விமானங்கள் பறக்கும் போது அவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்குவதில் குழப்பம் நீட்டிப்பதே இந்த விபத்திற்குக் காரணமாக இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+