டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மோடி வருத்தத்தில் இருக்கிறார்.. புல்வாமா தாக்குதலால் சாப்பிடவேயில்லை.. காங்கிரசுக்கு பாஜக பதில்!

புல்வாமா தாக்குதல் காரணமாக மனமுடைந்த பிரதமர் மோடி, சாப்பிடவேயில்லை என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மோடி வருத்தத்தில் சாப்பிடவேயில்லை, காங்கிரசுக்கு பாஜக பதில்!- வீடியோ

    டெல்லி: புல்வாமா தாக்குதல் காரணமாக மனமுடைந்த பிரதமர் மோடி, சாப்பிடவேயில்லை என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த பிப்ரவரி 14ம் தேதி வியாழக்கிழமை ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தீவிர தாக்குதல் நடைபெற்றது. இந்த மிக கொடூரமான தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியானார்கள்.

    இந்த தாக்குதலுக்கு மத்திய அரசின் அலட்சியமும் காரணம் என்று காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு வைத்து இருக்கிறது. பாஜக மீது மிக கடுமையான விமர்சனங்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வைத்துள்ளார்.

    குற்றச்சாட்டு

    குற்றச்சாட்டு

    இந்த நிலையில் பிரதமர் மோடி குறித்து காங்கிரஸ் வைத்த குற்றச்சாட்டில் ''மோடிக்கு புல்வாமா தாக்குதல் குறித்து கவலை இல்லை. அவர் தன்னுடைய புகழை பரப்புவதற்காக படம் எடுத்துக் கொண்டு இருக்கிறார். தாக்குதல் நடந்த போது மோடி கார்பெட் பூங்காவில் அவர் படத்திற்காக ஷூட்டிங்கில் இருந்தார்.'' என்று குற்றஞ்சாட்டி இருந்தது.

    சமோசா சாப்பிட்டார்

    சமோசா சாப்பிட்டார்

    அதேபோல் பிரதமர் மோடி அன்று மாலை சமோசா சாப்பிட்டுவிட்டு, பின் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டார். அனைத்து கட்சி சந்திப்பில் கூட அவர் கலந்து கொள்ளவில்லை. அதற்கு பதிலாக தேர்தல் கூட்டத்தில் போய் கலந்து கொண்டார். மோடிக்கு ராணுவ வீரர்கள் மேல் அக்கறை இல்லை, என்றும் குற்றஞ்சாட்டி உள்ளது.

    பாஜக தரப்பு

    பாஜக தரப்பு

    இந்த நிலையில் பாஜக தரப்பில் இருந்து பிரதமர் மோடி புல்வாமா தாக்குதலின் போது என்ன செய்தார் என்று விவரம் வெளியிடப்பட்டு இருக்கிறது. தாக்குதல் நடந்த பிப்ரவரி 14ம் தேதி மோடி காலை டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது தொடங்கி இரவு வரை என்ன செய்தார் என்று அதில் கூறப்பட்டுள்ளது. புல்வாமா தாக்குதல் நடந்த சில மணி நேரத்தில் மோடி ஆலோசனை கூட்டம் நடத்தினார் என்று அதில் கூறப்பட்டு இருக்கிறது.

    என்ன சாப்பாடு

    என்ன சாப்பாடு

    அதேபோல், பிரதமர் மோடி புல்வாமா தாக்குதலால் மனமுடைந்து போனார். எதுவும் சாப்பிடவில்லை. புல்வாமா தாக்குதலுக்கு பின் மோடி சாப்பிடவேயில்லை. காங்கிரஸ் வைக்கும் குற்றச்சாட்டுகள் எல்லாம் பொய்யானது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.

    English summary
    Due to Shock, PM Modi did not eat anything after Pulwama terror attack, answers BJP to Congress.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X