டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஊழல் வழக்கு... தொழில் அதிபர் அனூப் குமார் குப்தா கைது... அமலாக்கத்துறை அதிரடி!

Google Oneindia Tamil News

டெல்லி: அகஸ்டாவெஸ்ட்லேண்ட் வி.வி.ஐ.பி ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் தொழில் அதிபர் அனூப் குமார் குப்தாவை அமலாக்கத்துறை கைது செய்தது.

தற்போது நடைபெற்று வரும் விசாரணையில் அவர் ஒத்துழைக்கவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

E D arrests businessman Gupta in VVIP choppers money laundering case

இத்தாலியை தளமாகக் கொண்ட ஃபின்மெக்கனிகாவின் பிரிட்டிஷ் துணை நிறுவனமான அகுஸ்டாவெஸ்ட்லேண்டில் இருந்து 12 வி.வி.ஐ.பி ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த விவசாகரத்தில் இந்தியா கேட் பாஸ்மதி அரிசியை தயாரிக்கும் கே.ஆர்.பி.எல் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனரரும், தொழில் அதிபருமான அனூப் குமார் குப்தா ரூ.3,600 கோடிக்கு மேல் பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதன் காரணமாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கில் அனூப் குமார் குப்தாவை அமலாக்கத்துறை கைது செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அகஸ்டாவெஸ்ட்லேண்ட் வி.வி.ஐ.பி ஹெலிகாப்டர் வழக்கில் குப்தா கைது செய்யப்பட்டதாகவும், தற்போது நடைபெற்று வரும் விசாரணையில் அவர் ஒத்துழைக்கவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

English summary
Enforcement has arrested industrialist Anoop Kumar Gupta in the AugustaWestland VVIP helicopter scam case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X