திடீரென அதிர்ந்த அந்தமான் நிக்கோபார் தீவுகள்.. இன்று காலை நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.4ஆக பதிவு!
டெல்லி: அந்தமான் நிக்கோபார் தீவில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் 4.4 ரிக்டராகப் பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, அந்தமான் நிக்கோபார் தீவில் இன்று காலை 7.06 மணி அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. பூமிக்கு அடியில் 11 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவு பதிவாகியுள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
இந்த ஆண்டின் தொடக்கத்திலும், அந்தமான் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவானது. கேம்ப்பெல் பே இல் என்ற இடத்திலிருந்து 487 கிலோ மீட்டர் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி 10ஆம் தேதியன்றும் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications