Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இமயமலைக்கு கீழ் புதைந்துள்ள "பூகம்ப டைம் பாம்.." எந்த இந்திய நகரங்களுக்கு ஆபத்து! அப்போ சென்னை?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இமயமலைக்குக் கீழே ஒரு மாபெரும் பூகம்பத்திற்கான டைம் பாம் இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்தப் பூகம்பம் நிச்சயம் ஏற்படும் என்றும் எப்போது இது தாக்கும் என்பதே கேள்வியாக உள்ளதாகக் கூறும் ஆய்வாளர்கள், இது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளனர்.

கடந்த மாதம் மியான்மர் பகுதியில் வரலாறு காணாத அளவுக்கு மிகப் பெரிய பூகம்பம் ஏற்பட்டது. இது தாய்லாந்து, சீனா, இந்தியா வரையிலும் கூட உணரப்பட்டது. இதனால் பல நூறு பேர் உயிரிழந்த நிலையில், பல நூறு கோடி மதிப்பிலான பொருட்களும் சேதமடைந்தது. சமீப காலங்களில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலநடுக்கமாக இது பார்க்கப்படுகிறது.

Earthquake time bomb under Himalayas Which Indians cities will affect nearly 30 crore people in risk

பூகம்பம்

இதற்கிடையே மியான்மரில் ஏற்பட்டதைவிடப் பல மடங்கு அதிகப் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு பெரிய பூகம்பம் விரைவில் ஏற்படும் இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இமயமலைக்கு அடியில் ஏற்படும் புவியியல் மாற்றம் காரணமாக இந்தப் பூகம்பம் ஏற்படலாம் என்றும் இது ஒட்டுமொத்த வட இந்தியாவையும் உலுக்கிவிடும் ஆபத்து இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இது வரலாறு காணாத பேரழிவை ஏற்படுத்தும் ஆபத்து இருப்பதாகவும் எச்சரித்துள்ளனர்.

இமயமலை பூகம்பம்

இதை ஆய்வாளர்கள் மாபெரும் இமயமலை பூகம்பம் எனக் குறிப்பிடுகிறார்கள். இந்தப் பூகம்பம் ஏற்படும்போது அது ரிக்டர் அளவுகோலில் 8 அல்லது அதற்கு மேல் வலிமை கொண்டதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மற்றொரு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்.. வலிமையான பூகம்பம் ஏற்படும் என்பது வெறும் ஊகம் இல்லை.. அறிவியல் பூர்வமாக நிச்சயம் ஏற்படுமாம்.. எப்போது ஏற்படும் என்பது மட்டுமே ஆய்வாளர்களின் கேள்வியாக இருக்கிறது.

இது தொடர்பாக முன்னணி அமெரிக்கப் புவி இயற்பியலாளர் ரோஜர் பில்ஹாம் கூறுகையில், "இந்தியா ஒவ்வொரு நூற்றாண்டிலும் திபெத்தின் தெற்கு விளிம்பிலிருந்து சுமார் 2 மீட்டர் கீழே சரிகிறது. இது இயல்பானதுதான். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அது சீராகச் சரியவில்லை. பல நூறு ஆண்டுகளாக அது மூலையில் தொங்குவது போல இருக்கிறது. ஒரு கட்டத்தில் அது பூகம்பமாக மாறும். இதுபோல பூமிக்கு அடியில் ஏற்படும் மாற்றங்களால் இவை தவிர்க்கவே முடியாத நிகழ்வுகளாகும்" என்றார்.

வரலாறு காணாத பாதிப்பு

அதாவது பூமிக்குக் கீழே உள்ள டெக்டோனிக் தட்டுகள் நகர்ந்து கொண்டே இருக்கும். இமயமலைக்குக் கீழே உள்ள இந்திய டெக்டோனிக் தட்டு யூரேசியா தட்டுடன் பல நூறாண்டுகளாக உரசிக் கொண்டு இருக்கிறது. ஆண்டுக்குச் சுமார் 2 மீட்டர் என்ற அளவில் நகர்ந்து வருகிறது. ஒருகட்டத்தில் அது வரலாறு காணாத பாதிப்பை ஏற்படுத்தும் பூகம்பத்தை ஏற்படுத்தலாம் என்பதே ஆய்வாளர்களின் எச்சரிக்கையாக இருக்கிறது.

வரலாற்று ரீதியாகப் பார்க்கும்போது இதுபோன்ற வலிமையான பூகம்பங்கள் சில நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்ந்துள்ளன. அதேநேரம் இமயமலை வளைவைத் தாக்கிய டெக்டோனிக் அழுத்தத்தை வெளியிடப் போதுமான நிகழ்வு நடந்து சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. எனவே, இந்தப் பூகம்பம் ஏற்படுமா என்பது கேள்வியே இல்லை.. நிச்சயம் ஏற்படும்.. எப்போது ஏற்படும் என்பது மட்டுமே கேள்வியாக இருப்பதாக ஆய்வாளர் பில்ஹாம் குறிப்பிடுகிறார்.

எந்த நகரங்களில் பாதிப்பு

இந்த நிலநடுக்கம் இந்தியாவில் பல கோடி பேரைப் பாதிக்கும். கிட்டதட்ட 59% இந்தியா நிலநடுக்கத்தால் பாதிக்கும் ஆபத்தில் இருக்கிறது. வடக்கு மாநிலங்களான இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், பீகார் மற்றும் ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களும் ஆபத்தில் இருக்கிறது. ஏதோ தொலைதூர நகரங்கள் மட்டுமே ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம் இல்லை. டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய வட இந்திய நகரங்களும் கூட ஆபத்தில் தான் இருக்கிறது.

இந்தியாவில் ரிஸ்க் அதிகம் ஏன்!

இந்தியாவில் பூகம்பம் ஏற்படும்போது, நிலநடுக்கத்தைக் காட்டிலும் கட்டிடங்களே அதிகச் சேதத்தை ஏற்படும். பூகம்பத்தைத் தாங்கும் வகையிலான கட்டிடங்கள் கட்ட விதிகள் இருந்தாலும் அவை பெயரளவிலேயே இருக்கிறது. முக்கிய நகரங்களில் கூட பல கட்டிடங்கள் பூகம்பத்தைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. இதனால் பூகம்பம் ஏற்படும்போது, சரிந்து விழும் கட்டிடங்கள் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.

Take a Poll

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+