Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லி உள்பட வடமாநிலங்களை அதிரவைத்த நிலநடுக்கம்.. குலுங்கிய கட்டடங்களால் அலறிய மக்கள்! என்னாச்சு?

சமீபகாலமாக வடமாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று இரவு திடீரென்று நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் உள்பட பல வடமாநிலங்களில் இன்று இரவு திடீரென்று நிலஅதிர்வு ஏற்பட்டது. கட்டடங்கள் குலுங்கி பொருட்கள் கீழே உருண்டு விழுந்ததால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்து வெட்டவெளியில் தஞ்சமடைந்தனர்.

இந்தியாவில் சமீபகாலமாக அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் இன்று ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சீனா என பல நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஆப்கானிஸ்தானிலுள்ள இந்துகுஷ் மலைப்பகுதியை மையமாக வைத்து ரிக்டர் அளவில் 6.8 ஆக நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் அதனை சுற்றிய பல நாடுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் நிலநடுக்கம்

உலக நாடுகளில் நிலநடுக்கம்

துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படும் நிலையில் இந்தியாவிலும் பல மாநிலங்களில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. குறிப்பாக வடமாநிலங்களில் இன்று இரவு நிலநடுக்கம் உணரப்பட்டது.

3 வினாடி வரை நீடித்த நிலநடுக்கம்

3 வினாடி வரை நீடித்த நிலநடுக்கம்

அதன்படி டெல்லியில் இரவு சுமார் 10 மணியளவில் 3 வினாடிகள் வரை திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.கட்டங்கள் குலுங்கி பொருட்கள் உருண்டு விழுந்ததால் மக்கள் பீதியடைந்தனர். இதனால் அவர்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெட்டவெளியில் தஞ்சமடைந்தனர். மேலும் டெல்லியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை நன்கு உணர முடிந்தது என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.

விசிக எம்பி உணர்ந்த நிலநடுக்கம்

விசிக எம்பி உணர்ந்த நிலநடுக்கம்

இதுபற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பியான ரவிக்குமார் டெல்லியில் நிலநடுக்கத்தை நன்றாக உணர முடிந்தது என தெரிவித்துள்ளார். இதேபோல் பிரபலங்கள் டெல்லி நிலநடுக்கம் குறித்து சமூக வலைதளங்களில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் இரவில் வீடுகளை விட்டு வெளியே மக்கள் குவிந்து இருக்கும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

உபி, காஷ்மீர், ஹரியானா, பஞ்சாபில் நிலநடுக்கம்

உபி, காஷ்மீர், ஹரியானா, பஞ்சாபில் நிலநடுக்கம்

இதேபோல் உத்தர பிரதேச மாநிலம் வசுந்தரா, காசியாபாத் பகுதியில் நிலஅதிர்வு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி மக்களும் வீடுகளை விட்டு வெளியேறி வெட்டவெளியில் தஞ்சமடைந்தனர்.இதுதவிர பஞ்சாப், உத்தர பிரதேசம், ஹரியானா, காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் சில இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்களும் வீடுகளை விட்டு வெளியேறி பொதுவெளியில் தஞ்சமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+