நான்தான் இருக்கேன்ல.. இன்னொருத்தன் எதுக்கு.. காதலி கொலை.. அம்மாவையும் சேர்த்து கொன்ற கொடுமை
காதலி, அவரது தாயாரை குத்தி கொன்ற இளைஞர் கைதாகி உள்ளார்
டெல்லி: "நான் இருக்கும்போது இன்னொருத்தனா?" என்று ஆத்திரமடைந்த இளைஞர் காதலியை கொன்றதுடன், அவர் அம்மாவையும் சேர்த்து கொன்றுள்ள சம்பவம் டெல்லியை அதிரவைத்துள்ளது.
Recommended Video
டெல்லியில் வசுந்தரா என்க்ளேவ் என்ற அப்பார்ட்மென்ட் உள்ளது.. இங்கு வசித்து வருபவர் சுமிதா மேரி.. இவரது மகள் சமிர்தா.. இவருக்கு 25 வயதாகிறது. 5 ஸ்டார் ஹோட்டலில் இன்டர்னெட்டாக வேலை பார்த்து வந்தார்.

விக்ராந்த் என்ற இளைஞருடன் சமிர்தாவுக்கு காதல் ஏற்பட்டது.. ஆனால் விக்ராந்தின் சில நடவடிக்கைகள் பிடிக்கததால் அவரை விட்டுவிலகினார்.. பிறகு இன்னொரு நபரை சமிர்தா காதலிக்க தொடங்கினார்.
இதுதான் விக்ராந்த்துக்கு ஆத்திரத்தை உண்டுபண்ணியது.. அதனால் தனக்கு கிடைக்காத காதலி யாருக்குமே கிடைக்க கூடாது என்று முடிவெடுத்தார்.. கொலை செய்யவும் துணிந்தார்.
சம்பவத்தன்று இரவு சமிர்தாவின் வீட்டுக்கு சென்றார்.. அப்போது சமிர்தா வீட்டில் இல்லை.. அதனால் வீட்டுக்கு வெளியிலேயே தன்னுடைய நண்பர் பிரயாக்குடன் காத்து நின்றார்.. இரவு 11 மணிக்கு சமிர்தா காரில் வந்து இறங்கினார்.. அவர் வீட்டுக்குள் சென்றதும் பின்னாடியே இவர்களும் சென்று, வீட்டில் இருந்த சமிர்தாவின் தாய் மற்றும் சமிர்தாவை கொலை செய்துவிட்டு தப்பி உள்ளனர்.
மறுநாள் காலை வீட்டு வேலைக்காரர் வழக்கம்போல் வந்து கதவை தட்டினார்.. ஆனால் யாருமே திறக்காததால், அக்கம்பக்கத்தினரிடம் இதை பற்றி சொல்லி உள்ளார்.. அவர்களும் தட்டி பார்த்துவிட்டு, சந்தேகமடைந்து போலீசாருக்கு சொல்லி உள்ளனர்.. அவர்கள் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோதுதான் சமிர்தாவும் சுமிதா மேரியும் ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டனர்.
அவர்கள் சடலங்களை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கும் அனுப்பினர்.. இதுகுறித்து சமிர்தாவின் தோழி புகார் கொடுக்கவும், அதன்பேரில் விசாரணை ஆரம்பமாகி உள்ளது.. வீட்டின் அருகில் இருந்த சிசிடிவி காட்சியும் ஆராயப்பட்டது.. அப்போதுதான் காதலனும் நண்பர் பிரயாக்கும் வீட்டிற்குள் செல்வது பதிவாகி இருந்தது தெரியவந்தது.. அவர்களை போலீசார் தேடி வரும்போதுதான் விக்ராந்த் கைதாகி உள்ளார்.. நண்பன் இன்னும் தலைமறைவாகவே உள்ளதால், தேடும் பணி நடக்கிறது.
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
கல்லூரி காதலனுடன் கள்ளக்காதல் + ரூ.1000 கோடி சொத்து.. மகளையே கொன்று நாடகமாடிய பெங்களூர் பெண் -
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்!












Click it and Unblock the Notifications