தேசியவாத காங்கிரஸ் அகில இந்திய தலைவர் பதவியில் இருந்து சரத்பவார் அதிரடி நீக்கம்- அஜித்பவார் பதிலடி!
டெல்லி: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவியில் இருந்து அக்கட்சியின் நிறுவனரான சரத்பவாரை நீக்கி இருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தில் அஜித்பவார் குறிப்பிட்டுள்ளதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியான தேசியவாத காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. ஏற்கனவே சிவசேனா கட்சி இரண்டாக உடைந்து ஒரு கோஷ்டி பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. அதே பாணியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அஜித்பவார் தரப்பு பாஜக ஆட்சியில் இணைந்துள்ளது. அஜித் பவார் துணை முதல்வராகி இருக்கிறார்; அவருடன் 8 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளனர்.

இதன் அடுத்த கட்டமாக யார் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்கிற அக்கப்போர் தொடங்கி உள்ளது. சரத்பவார், அஜித்பவார் இருதரப்பும் இன்று மும்பையில் தங்களது பலத்தை காட்ட எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைக் கூட்டினர். சரத்பவார் கூட்டத்துக்கு 13 எம்.எல்.ஏக்கள் மட்டுமே சென்றனர். அஜித்பவார் கூட்டத்தில் 30 எம்.எல்.ஏக்கள் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
மேலும் தேர்தல் ஆணையத்துக்கு அஜித்பவார் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் தாங்கள்தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ்; 40 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதங்களையும் இணைத்துள்ளோம். ஆகையால் தேசியவாத காங்கிரஸ் பெயர், சின்னம் ஆகியவற்றை தங்கள் அணிக்கே ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
அத்துடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவியில் இருந்து சரத்பவார் நீக்கப்பட்டுவிட்டார் எனவும் தேர்தல் ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தில் அஜித்பவார் குறிப்பிட்டுள்ளதாகவும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதேநேரத்தில் தேசியவாத காங்கிரஸ் தரப்பிலும் தேர்தல் ஆணையத்திடம் ஒரு மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் அஜித்பவார் உட்பட 9 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் என்சிபி தொடர்பான எந்த முடிவையும் தங்களை கலந்து ஆலோசிக்காமல் எடுக்கக் கூடாது என அதில் என்சிபி மகாராஷ்டிரா மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் சுட்டிக்காட்டி இருக்கிறார். ஜெயந்த் பாட்டீலை, மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கியதாக அஜித் பவார் கோஷ்டி அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications