நாடு முழுவதும் விரைவில் தீவிர வாக்காளர் திருத்த பணி? தேர்தல் ஆணையம் நடத்தும் முக்கிய ஆலோசனை!
டெல்லி: நாடு முழுவதும் விரைவில் தீவிர வாக்காளர் திருத்த பணி நடத்த உள்ளதாகவும் இதற்காக முக்கிய ஆலோசனைகளை தேர்தல் ஆணையம் (EC- Election Commission) செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்த ஆண்டு, அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், அதற்கு முன்பாக இந்த சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணிகள் நடைபெறலாம் என கூறப்படுகிறது.
பீகார் மாநிலத்தில் வரும் நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதில் வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் என 65 லட்சம் பேர் நீக்கப்பட்டனர்.

நாடு முழுவதும் சிறப்பு தீவிர திருத்த பணி
பீகாரில் நடைபெற்ற இந்த சிறப்பு வாக்காளர் திருத்த பணிக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து தவறுதலாக நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
இது ஒருபக்கம் இருக்க, விரைவில் நாடு முழுவதும் சிறப்பு தீவிர திருத்த பணியை மேற்கொள்வதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. அதாவது வரும் 10ஆம் தேதி அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எப்போது தொடங்கப்படும்?
அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணியை தொடங்க திட்டமிட்டுள்ளதாவும் கூறப்படுகிறது. தற்போது அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளும், தங்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை குறித்து செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெறும் ஆலோசனையின் போது விரிவான விவரங்களை வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரும் 10 ஆம் தேதி ஆலோசனை
தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் பதவியேற்ற பிறகு நடைபெறக் கூடிய மூன்றாவது ஆலோசனை இதுவாகும். நாடு தழுவிய அளவில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிக்காக தயார் நிலைகள் குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக சொல்லப்படுவதால், வரும் 10ஆம் தேதி நடைபெற உள்ள ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு, அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, அதற்கு முன்பாக இந்த சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணிகள் நடைபெறலாம் என்பதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications