டெல்லி வக்பு வாரிய முறைகேடு: ஆம் ஆத்மி எம்எல்ஏ அமனதுல்லா கான் அதிரடி கைது!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி வக்பு வாரிய முறைகேடு விவகாரத்தில்தான் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ அமனதுல்லா கான், அமலாக்கத்துறையால் அதிரடியாக செய்யப்பட்டுள்ளார். டெல்லி வக்பு வாரியத்துக்கு சட்டவிரோதமாக லஞ்சம் பெற்றுக் கொண்டு பணியாளர்களை நியமித்தார்; இதில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடந்தது என்பதுதான் அமனதுல்லா கான் மீதான குற்றச்சாட்டு.

டெல்லி வக்பு வாரியத் தலைவராக அமனதுல்லா கான் பதவி வகித்த சட்டவிரோத பணியாளர் நியமனம் உள்ளிட்ட முறைகேடுகள் விஸ்வரூபம் எடுத்தன. இதனையடுத்து முதலில் அமனதுல்லா கான் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த முறைகேட்டில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது என அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்தது.

ed


டெல்லி வக்பு வாரிய வழக்கில் தமக்கு முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தை நாடினார் அமனதுல்லா கான். ஆனால் அவரது மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து டெல்லியில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் சுமார் 12 மணிநேர விசாரணைக்குள்ளாக்கப்பட்டார் அமனதுல்லா கான்.

இந்த நிலையில் இன்று காலை முதலே டெல்லியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. டெல்லியில் அமனதுல்லா கான் வீட்டில் முகாமிட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்துவிட்டதாக ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டினர். மத்தியில் ஆளும் பாஜக அரசு தமது கட்சித் தலைவர்களை குறிவைத்து பழிவாங்கி வருகிறது என்பது ஆம் ஆத்மி தலைவர்களின் விமர்சனம்.


இது தொடர்பாக தமது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அமனதுல்லா கான், இன்று காலை மத்திய அரசின் பொம்மைகளான அமலாக்கத்துறையினர் என் வீட்டுக்கு வந்தனர். இந்த நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதுதான் பெரிய குற்றமா? இந்த சர்வாதிகார ஆட்சி எத்தனை நாள்தான் நீடிக்குமோ என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது அமனதுல்லா கான், அமலாக்கத்துறை அதிகாரிகளால் அதிகாரப்பூர்வமாக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+