ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு.. அமலாக்கப் பிரிவுக்கு ரூட் கிளியர்.. இன்றே கைதாகிறார் ப.சிதம்பரம்
Recommended Video
டெல்லி: ஐஎன்எக்ஸ் அமலாக்கத் துறை வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டதால் அவர் இன்றே கைது செய்யப்பட வாய்ப்புகள் இருக்கின்றன.
கடந்த 2007-ஆம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்த போது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ 305 கோடி வெளிநாட்டு நிதியை பெற்றது. இதற்காக மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ 2017-ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் கருப்புப் பண மோசடி சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது.

உயர்நீதிமன்றம்
இந்த நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தங்களை கைது செய்யக் கூடாது என கோரி உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரமும் கார்த்தி சிதம்பரமும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் முன்ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி மறுத்துவிட்டது.

மிகவும் மோசமானவை
இதை எதிர்த்து ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் சிபிஐயால் கைது செய்யப்பட்டார். தற்போது சிபிஐ காவலில் உள்ளார். இன்றுடன் அவரது சிபிஐ காவல் முடிவடைகிறது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வழக்கில் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதியோ, பொருளாதார முறைகேடுகள் மிகவும் மோசமானவை.

முன்ஜாமீன்
இதுபோன்ற வழக்குகளில் முன்ஜாமீன் வழங்குவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். சட்டப்பிரிவு 32-இன் படி முன்ஜாமீன் என்பது அடிப்படை உரிமை இல்லை. முன்ஜாமீன் கொடுக்கும் அளவுக்கு இந்த வழக்கு தகுதியானதல்ல.

தாக்கல்
விசாரணை அமைப்புகளுக்கு தேவையான அனைத்து சுதந்திரங்களும் கொடுக்கப்பட வேண்டும். இந்த நிலையில் முன்ஜாமீன் கொடுத்தால் அது வழக்கு விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தும். குற்றம்சாட்டப்பட்ட சிதம்பரம் தனது ஜாமீன் மனுவை கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இன்றே கைது
ப.சிதம்பரத்தையும் கார்த்தியையும் கைது செய்ய உச்சநீதிமன்ற வழக்கு தடையாக இருந்த நிலையில் தற்போது இருவருக்கும் முன்ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. எனவே கீழமை நீதிமன்றத்தை அமலாக்கத் துறை நாடி ப.சிதம்பரத்துக்கு எதிராக பிடிவாரண்ட் பெற்றால் அவர் இன்றே கைது செய்ய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ப.சிதம்பரத்தையும் கார்த்தியையும் கைது செய்து விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளியே வரும் என அமலாக்கத் துறையும் சிபிஐயும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications