பாயிண்ட்டை பிடித்த செந்தில் பாலாஜி.. ஜாமின் கிடைக்குமா? விசாரணையை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
டெல்லி: செந்தில் பாலாஜி தொடர்ந்த ஜாமீன் மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தது. அப்போது அமலாக்த்துறை வேண்டும் என்றே வழக்கை தாமதப்படுதுகிறது என்று செந்தில் பாலாஜி தரப்பு வாதிட்டது. தொடர்ந்து மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் விசாரணையை ஒத்திவைத்தது.
சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்றக் காவலில் சென்னை புழல் சிறையில் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், மீண்டும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்து இருக்கிறார்.

தற்போது செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. முன்னதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை தாக்கல் செய்து இருந்தார். ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட் அவருக்கு எதிரான வழக்கு விசாரணையை, மூன்று மாதங்களில் முடிக்க முதன்மை சிறப்பு நீதிமன்றத்துக்கு, உத்தரவிட்டது.
மூன்று மாதங்களில் விசாரணையை முடிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிராகவும் செந்தில் பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார். செந்தில் பாலாஜியின் மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
அதனடிப்படையில் தற்போது அமலாக்கத்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமலாகக்துறை தாககல் செய்த பதில் மனுவில், செந்தில் பாலாஜி ஜாமின் கோரி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை பதில் மனுவில் கூறியிருப்பதாவது:
செந்தில் பாலாஜி விசாரணைக்கு உரிய முறையில் ஒத்துழைக்க மறுக்கிறார். அவர் வெளியே வந்தால் சாட்சியங்களை கலைக்க கூடிய அபாயம் உள்ளது. வழக்கின் விசாரணையிலும் முட்டுக்கட்டை போடுவதற்கான வாய்ப்பு உள்ளது. அதனால் செந்தில் பாலாஜியின் மனுக்கள் எதையுமே விசாரிக்க கூடாது.. என்ற பல்வேறு விஷயங்களை மனுவில் அமலாகக்த்துறை கூறியுள்ளது.
செந்தில் பாலாஜி கடந்த காலங்களில் வழக்கு விசாரணையில் இருந்து தப்பிக்க முயன்றார் என்பதையும் அமலாகக்துறை தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், செந்தில் பாலாஜி தொடர்ந்த ஜாமீன் மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அமலாக்கத்துறை நேற்று இரவுதான் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. காலதாமதமாக பதில் மனு தாக்கல் செய்வதன் மூலம் வழக்கின் விசாரணையை தாமப்படுத்த அமலாகக்த்துறை முயற்சிக்கிறது. நாங்கள் வாதங்களை முன்வைக்க தயராக இருக்கிறோம்" என்று கூறியது.
மேலும், 320 நாட்களுக்கும் மேலாக செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறார். எனவே வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. எனினும், அமலாகக்த்துறை தாக்கல் செய்த பதில் மனுவை நாங்கள் இன்னும் படித்து பார்க்கவில்லை என்பதால் எங்களுக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது எனக் கோரி இந்த வழக்கின் விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications