ஆட்டம் ஆரம்பம்...பிரியங்கா கணவர் வதேராவின் முன்ஜாமீனை ரத்து செய்ய கோரி அமலாக்கத்துறை திடீர் மனு
டெல்லி: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவின் முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை திடீரென மனுத் தாக்கல் செய்துள்ளது.
லண்டனில் வதேரா சொத்து வாங்கியதில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடந்துள்ளது என்பது அமலாக்கத்துறையின் வழக்கு. இவ்வழக்கில் வதேரா, அவரது உதவியாளர் மனோஜ் அரோரா இருவர் மீதும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.

இதையடுத்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இருவரும் இடைக்கால முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். ஆனால் இதற்கு அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
வதேரா, விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என வாதிட்டது அமலாக்கத்துறை. இதை நிராகரித்த நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று அமலாக்கத்துறை மீண்டும் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. அதில், சாட்சிகளை வதேரா கலைத்துவிடுவார் என்பதால் அவரது முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆட்டம் ஆரம்பம்!
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications