டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்த குட்டி மாநிலத்தில் இத்தனை பணக்கார, குற்றவியல் பின்னணி கொண்ட எம்எல்ஏக்களா?

Google Oneindia Tamil News

டெல்லி: மிசோரம் மாநிலத்தில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பணக்காரர்கள் என்றும் சிலர் குற்றவியல் வழக்குகளில் ஈடுபட்டவர்கள் என்றும் தெரியவந்தது.

மிசோரம் சட்டசபை தேர்தலில் 40 இடங்களில் அம்மாநில கட்சியான மிசோ தேசிய முன்னணி (எம்என்எஃப்) 26 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சைகள் 8 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

Education Background CriminalCases and Assets Mizoram

இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் சிலர் பணக்காரர்கள், குற்றவியல் வழக்குகளை கொண்டவர்கள், அவர்களது கல்வித் தகுதி குறித்தும் விவரங்கள் வெளியாகியுள்ளன.

கிழக்கு ஐஸ்வால் தொகுதி எம்எல்ஏ ராபர்ட் ரோமாியா ராய்டுக்கு ரூ.44 கோடியும், கிழக்கு துய்பு தொகுதி எம்எல்ஏ ராம்தான்வியாவுக்கு 16 கோடியும், ஐஸ்வால் தெற்கு தொகுதி எம்எல்ஏ லால்சுவான்தாங்காவுக்கு ரூ. 12 கோடியும், அச்சாக் தொகுதி எம்எல்ஏ லால்ரிண்டிகா ரால்டேவுக்கு ரூ. 11 கோடியும், தூரியால் தொகுதி எம்எல்ஏ ஆண்டிரூ எச் தாங்கிலியானாவுக்கு 9 கோடி மதிப்பிலான சொத்து உள்ளது.

குற்றவியல் வழக்கு என்று வரும் போது ஐஸ்வால் கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஜோரம்தங்கா மீது இரு வழக்குகளும், தெற்கு துய்பு தொகுதி எம்எல்ஏ டாக்டர் ஆர் லல்தாங்கிலியானா மீது ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது.

கல்வித் தொகுதி என்று பார்த்தால் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களில் பட்டப்படிப்பை 12 பேரும், தொழில்முறை பட்டதாரிகள் 6 பேரும் முதுநிலை பட்டதாரிகளாக 6 பேரும், 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 5 பேரும், முனைவர் பட்டம் பெற்றவர்கள் 5 பேரும், 10 ஆவது தேர்ச்சி செய்தவர்கள் 2 பேரும் , 8 ஆவது தேர்ச்சி பெற்றவர்கள் இருவரும், 5 ஆவது தேர்ச்சி பெற்றவர் ஒருவரும் உள்ளனர்.

English summary
Here are the list of Richest winners, criminial cases who won in Mizoram Assembly election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X