அசாம் மாநிலத்தில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள்.. இது SIR மாதிரி இல்லை.. தேர்தல் ஆணையம் அப்டேட்
டெல்லி: அசாமில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் நடக்கும் SIR போல அல்லாமல், அசாமில் வாக்காளர்கள் எந்த படிவத்தையும் நிரப்பவோ, ஆவணம் சமர்ப்பிக்கவோ தேவையில்லை. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை உறுதி செய்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை மேற்கொண்டு வருகிறது தேர்தல் ஆணையம். இந்த பட்டியலில் தான் தற்போது அசாம் மாநிலமும் இணைந்துள்ளது. அசாம் மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கும் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

இதுதொடர்பாக அசாம் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்களை பிறப்பித்து உள்ளது. அதன்படி சிறப்புத் திருத்தத்தை மேற்கொள்ள அசாம் மாநிலத்திற்கு 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி தகுதி தேதியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக குடியேறிய பலர் அந்த மாநிலத்தில் வாக்காளர்களாக பதிவு செய்திருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் அங்கு சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (NRC) நிலை நிலுவையில் உள்ளதால், தேர்தல் ஆணையம் அசாஅம் மாநிலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை (SIR) நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அசாமில் 2019 ஆம் ஆண்டு NRC பட்டியலில் 3.3 கோடி விண்ணப்பதாரர்கள் இருந்த பட்டியலில் இருந்து கிட்டத்தட்ட 19.6 லட்சம் பேர் நீக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் தொடங்கப்பட உள்ளன. அசாமில் வாக்காளர்கள் எந்த படிவத்தையும் நிரப்பவோ, ஆவணம் சமர்ப்பிக்கவோ தேவையில்லை. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை உறுதி செய்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால், அவசர அவசரமாக எஸ்.ஐ.ஆர். பணிகளை மேற்கொள்ளக் கூடாது எனக்கூறி தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்க மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே, தமிழகத்தில் SIR பணி தொடங்கி நடந்து வருகிறது. வீடு, வீடாக ஊழியர்கள் விண்ணப்பங்களை வழங்கி வருகிறார்கள். கடந்த 4 ஆம் தேதி தொடங்கிய இந்த பணிகள், வரும் டிசம்பர் 4 ஆம் தேதி நிறைவடைய உள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications