தமிழக வாக்காளர் பட்டியலில் வரும் மேஜர் மாற்றம்.. எல்லா மாநிலங்களிலும் லிஸ்ட் போடும் தேர்தல் ஆணையம்
டெல்லி: பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் (Special Intensive Revision - SIR) நடவடிக்கையைத் தேர்தல் ஆணையம் மேற்கொள்கிறது. இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், பல்வேறு தரப்பினரும் இதை எதிர்த்து வழக்கும் கூட தொடர்ந்திருந்தனர். இருப்பினும், இந்தச் சர்ச்சை ஓய்வதற்குள்ளேயே நாடு முழுவதும் இந்த நடைமுறையைச் செயல்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இந்தச் சூழலில் தேர்தல் ஆணையம் திடீரென அங்குச் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை மேற்கொள்கிறது. தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பு இந்தச் செயல்முறை நடப்பதால் இது சர்ச்சையானது. அங்குள்ள பல்வேறு எதிர்க்கட்சிகளும் இதை எதிர்த்தனர்.

நீதிமன்றத்தில் வழக்கு
சுப்ரீம் கோர்ட்டிலும் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட ஆவணங்கள் இல்லாததால், தகுதிவாய்ந்த குடிமக்களுக்கு வாக்களிக்கும் உரிமை பறிபோகும் என்று கூறி, எதிர்க்கட்சிகள் மற்றும் சில அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் இந்தச் சிறப்புத் திருத்தத்திற்கு எதிராக மனுத் தாக்கல் செய்திருந்தன.
இருப்பினும், இந்தச் சிறப்புத் திருத்தத்தை மேற்கொள்ளத் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இருப்பதாகக் கூறிய சுப்ரீம் கோர்ட், இந்த நடைமுறையைத் தொடரவும் அனுமதி அளித்தது. எதிர்க்கட்சிகள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள போதிலும், சுப்ரீம் கோர்ட் அனுமதியால் தேர்தல் ஆணையம் இதைத் தொடர்ந்து மேற்கொள்ளவுள்ளது.
அமித் ஷா திட்டவட்டம்
இந்த நடைமுறையால் வாக்காளர் உரிமை பறிபோவதாக எதிர்க்கட்சிகள் சாடினர். இருப்பினும், இதை மறுத்துள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, "இந்த நடைமுறையில் யாருக்காவது ஆட்சேபணை இருந்தால், அவர்கள் தேர்தல் ஆணையத்தை அணுக வேண்டும். வாக்காளர் பட்டியல் திருத்தம் இப்போது புதிதாக நடக்கவில்லை. இது 1991ம் ஆண்டும் நடந்தது. மேலும், இது பீகாரில் மட்டும் நடக்கவில்லை. நாடு முழுவதும் நடக்கும் என்று நினைக்கிறேன். இந்த விஷயம் உச்ச நீதிமன்றத்தில் உள்ளது" என்றார்.
எதிர்க்கட்சிகள் குறித்துப் பேசிய அமித் ஷா, "தேர்தல் ஆணையம் எதைச் செய்தாலும் அவர்கள் எதிர்ப்பார்கள். தேர்தலில் தோல்வியடைந்ததை நியாயப்படுத்த அவர்கள் இதுபோல பொய்யான கற்பனையான காரணங்களைக் கூறுகிறார்கள். உதாரணமாகச் சமீபத்தில் அவர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களே தோல்விக்குக் காரணம் என்றனர். இப்போது இதைச் சொல்கிறார்கள்" என்று கூறியிருந்தார்.
தேர்தல் ஆணையம்
இதற்கிடையே நாடு முழுக்க உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்குத் தேர்தல் ஆணையம் புதிய அறிவுறுத்தலைக் கொடுத்துள்ளது. அதாவது 2026 ஜனவரி 1ஐ தகுதி நாளாகக் கொண்டு சிறப்புத் திருத்த நடவடிக்கையை மேற்கொள்ளத் தயாராகுமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. அதாவது, அன்றைய தினம் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். சில தலைமைத் தேர்தல் அதிகாரிகள் ஏற்கனவே இதற்கான பணிகளை ஆரம்பித்துவிட்டனர்.
தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்கள்
நாடு முழுக்க இந்தச் சிறப்பு சீர்திருத்த நடவடிக்கையை எடுப்பது குறித்து வரும் 28ம் தேதிக்குப் பிறகு தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அன்றைய தினம் தான் பீகார் சிறப்புத் திருத்தம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இறுதி முடிவெடுக்கும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்தாண்டு தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் தேர்தல் நடப்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications