தேர்தல் பத்திரங்களின் முழு விவரம் வெளியீடு.. எந்த நிறுவனம் யாருக்கு நன்கொடை! ஈஸியாக கண்டுபிடிக்கலாம்
டெல்லி: உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து முழு விவரங்களுடன் தேர்தல் பத்திரம் குறித்த தகவல்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் அவை சட்டவிரோதமானது என்ற உச்ச நீதிமன்றம் இந்த முறையில் நன்கொடை பெறுவதைத் தடை செய்தது. மேலும், 2019 முதல் நன்கொடை விவரங்களையும் வெளியிட உத்தரவிட்டது.

அதன்படி தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை எஸ்பிஐ தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது. தேர்தல் ஆணையமும் இந்த தகவல்களை இணையத்தில் வெளியிட்டது. இருப்பினும், அதில் தேர்தல் பத்திரங்களின் பிரத்யேக எண் உள்ளிட்ட முக்கிய தகவல் இல்லை.
இதனால் எந்தக் கட்சிக்கு எந்த நிறுவனம் எப்போது நன்கொடை கொடுத்தது என்பது குறித்த தகவல்களை பெற முடியாத சூழல் இருந்தது. இந்த விவகாரத்தில் எஸ்பிஐ தரப்பை உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியது. இதையடுத்து முழு விவரங்களுடன் தேர்தல் பத்திரம் குறித்த தகவல்கள் தேர்தல் ஆணையத்திடம் வழங்கி விட்டதாக எஸ்பிஐ தரப்பு உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.
இந்தச் சூழலில் முழு விவரங்களுடன் தேர்தல் பத்திரம் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் பத்திரம் தொடர்பான முழு தகவல்களை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எஸ்பிஐ வழங்கிய தேர்தல் பத்திரம் தொடர்பான முழு விவரங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் பத்திரங்களின் பிரத்யேக எண் வெளியிடப்பட்டுள்ளதால் எந்தக் கட்சிக்கு எந்த நிறுவனம் எப்போது நன்கொடை கொடுத்தது என்பது குறித்த தகவல்களை பெற முடியும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications