இவிஎம்-களில் முக்கிய மாற்றம்.. இனி வேட்பாளர்களின் புகைப்படம் கலரில்.. தேர்தல் ஆணையம் புதிய முடிவு
டெல்லி: ஈவிஎம் எனப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முதல் முறையாக வேட்பாளர்களின் பெயர், புகைப்படம், கட்சி சின்னம் ஆகியவை வண்ண நிறங்களில் இடம்பெறும் என்ற புதிய தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வாக்காளர்கள் தாங்கள் வாக்களிக்கும் வேட்பாளர்களை எளிதில் கண்டறியும் விதமாக, இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் இனி வண்ண புகைப்படங்கள் இடம் பெறும் என்று அறிவித்துள்ளது.
நம் நாட்டில் வாக்குப்பதிவுக்கு EVM எனப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம், கட்சி சின்னம் ஆகியவற்றை பொருத்தப்பட்டிருக்கும். தற்போது வரை வேட்பாளர்களின் புகைப்படங்கள் கருப்பு வெள்ளை நிறத்தில் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

வண்ண புகைப்படங்கள் இடம் பெறும்
இந்த நிலையில்தான் வாக்காளர்கள் தாங்கள் வாக்களிக்கும் வேட்பாளர்களை எளிதில் கண்டறியும் வகையில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் இனி வண்ண புகைப்படங்கள் இடம் பெறும் என்று அறிவித்துள்ளது. வரும் பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் இவை நடைமுறைக்கு வரும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
புதிய வடிவமைப்பில் வேட்பாளரின் புகைப்படம் முக்கிய இடம் பிடிக்கும். ஒதுக்கப்படும் இடத்தின் நான்கில் மூன்று பங்கு, வேட்பாளரின் முகம் தெளிவாக தெரியும் வகையில் அச்சிடப்பட்டிருக்கும். இதனால் முகங்கள் மிகத் தெளிவாக தெரியும். வரிசை எண் பெரியதாக, நன்கு தெரியும்படி அச்சிடப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
EVM வாக்குச்சீட்டுகள்
தேர்தல் நடத்தை விதிகள், 1961 விதி 49B-ன் கீழ் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அனைத்து வேட்பாளர் பெயர்கள், NOTA பெயர்கள் ஒரே எழுத்துருவில் வரும். வாசிக்க எளிதான அளவிலும் இவை இருக்கும். EVM வாக்குச்சீட்டுகள் 70 GSM தாளில் அச்சிடப்படும். சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு இளஞ்சிவப்பு நிறத் தாள் பயன்படுத்தப்படும். குறிப்பிட்ட RGB மதிப்புகளுடன் தாள் தயாரிக்கப்படும். இது வாக்காளர்களுக்கு எளிதாகவும், குழப்பமின்றியும் வாக்களிக்க உதவும்.
தற்போது வரை வேட்பாளர் பெயர், சின்னம், வரிசை எண் மட்டுமே இருந்தன. புகைப்படங்கள் சிறியதாகவோ அல்லது இல்லாமலோ இருந்தன. தற்போது வாக்குச்சீட்டு வடிவமைப்பு முழுமையாக மாறியுள்ளது. இது கடந்த ஆறு மாதங்களில் ஆணையத்தின் 28 சீர்திருத்தங்களின் தொடர்ச்சியாகும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன்பே
வாக்குப்பதிவு இயந்திரங்களில் புகைப்படங்கள் அச்சிடப்படும் முறை 10 ஆண்டுகளுக்கு முன்பே அமல்படுத்தப்பட்டது. சில தொகுதிகளில் ஒரே பெயர்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இடம் பெறுவதால், வாக்காளர்களுக்கு வேட்பாளர் விவரங்களை கண்டறிவதில் சிரமம் உள்ளது. இதுபோன்ற பிரச்சனைகளை களையும் விதமாக புதிய முறையை தேர்தல் ஆணையம் கொண்டு வர உள்ளது.
பீகாரில் வரும் நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பீகார் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக, அம்மாநிலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதன்படி, பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியல்
பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள் ஆவணங்களை காட்டி பட்டியலில் பெயரை சேர்க்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. விடுபட்டவர்களைச் சரிபார்க்க, 12வது ஆவணமாக ஆதாரை எடுத்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றமும் தெரிவித்துள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் அக்டோபர் 1ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக நடைபெற்றிருந்தால், சார்ந்த நடவடிக்கை ரத்து செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications