Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடிச்சு தூக்கும் ஆம் ஆத்மி.. கிடைத்தது தேசிய கட்சி அங்கீகாரம்! இழந்த இந்திய கம்யூனிஸ்டு, திரிணாமூல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆம் ஆத்மி கட்சிக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தேசிய கட்சிக்கான அந்தஸ்தை வழங்கி இருக்கிறது. டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி, பிற மாநிலங்களிலும் குறிப்பிட்டு சதவீத வாக்கு வங்கியை வைத்து இருக்கிறது. அதே நேரம் இந்திய கம்யூனிஸ்டு மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சி தேசிய அந்தஸ்தை இழந்து இருக்கின்றன.

இதுகுறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில், டெல்லி, கோவா, பஞ்சாப் மற்றும் குஜராத் மாநில தேர்தல்களில் ஆம் ஆத்மியின் செயல்பாடுகளை வைத்து அதற்கு தேசிய கட்சி அந்தஸ்தை வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த அங்கீகாரம் தங்களுக்கு மேலும் பொறுப்புணர்வை அதிகப்படுத்துவதாக ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்து இருக்கிறார்.

Election Commission of India gave National Party status to Aam Aadmi

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் அவர், "இவ்வளவு குறுகிய காலத்தில் தேசிய கட்சியா? இது அதிசயம் இல்லாமல் வேறு என்ன. அனைவருக்கும் வாழ்த்துக்கள். நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு எங்களை இந்த நிலைக்கு அழைத்து வந்து இருக்கிறார்கள். மக்கள் எங்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். மக்கள் இன்று எங்களுக்கு இந்த மிகப்பெரிய பொறுப்பை கொடுத்து உள்ளனர். இந்த பொறுப்பை பரிபூரணமாக செய்ய கடவுள் எங்களை ஆசீர்வதித்திக்க வேண்டும்." என்றார்.

அதே நேரம் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகள் பெரும் பின்னடைவை சந்தித்து உள்ளன. ஆம், இந்த 2 கட்சிகளும் தேசிய கட்சி அந்தஸ்தை பெற்று இருந்த நிலையில் தற்போது அந்த அந்தஸ்தை இழந்து இருக்கின்றன. அதைவிட நாட்டின் அனைத்து தொகுதிகளிலும் கிளைகளை பரப்பி இருக்கும், பழமையான இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் தேசிய கட்சி என்ற அந்தஸ்தை பறிகொடுத்து உள்ளது.

Election Commission of India gave National Party status to Aam Aadmi

இந்தியாவில் ஒரு கட்சி தேசிய கட்சி என்ற அந்தஸ்தை பெறுவதற்கு, 4 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் கட்சியை நடத்த வேண்டும். அல்லது மக்களவையில் 2 சதவீத சீட்டுகளை பெற்று இருக்கும் கட்சி தேசிய கட்சி என்ற அங்கீகாரத்தை பெறும். தேசிய கட்சி என்ற அங்கீகாரத்தை இழப்பதால் நாடு முழுவதும் தேர்தலில் போட்டியிடும்போது அனைத்து வேட்பாளர்களுக்கும் பொதுவான சின்னம் ஒதுக்கப்படாது.

உதாரணத்துக்கு திரிணாமூல் காங்கிரஸ் கர்நாடகாவில் போட்டியிட்டால் அக்கட்சிக்கு புதிய சின்னமே இனி ஒதுக்கப்படும். தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, இந்தியாவில் தற்போது 6 தேசிய கட்சிகளே உள்ளன. காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பகுஜன் சமாஜ் கட்சி, தேசிய மக்கள் கட்சி மற்றும் ஆம் ஆத்மி ஆகியவை இதில் இடம்பெற்று இருக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+