அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி- தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது!ஓபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு!
டெல்லி: அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்ததால் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னமும் கிடைத்துள்ளது.
அதிமுகவின் 2022-ம் ஆண்டு ஜூலை 11 பொதுக்குழுவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓபிஎஸ் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த தீர்மானங்கள், இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காமல், ஏற்காமல் இருந்து வந்தது.

இதனிடையே அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் தேர்தல் ஆணையம், எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்காமல் இருந்து வந்தது. இதனால் டெல்லி உயர்நீதிமன்றத்தில், தம்மை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், தாங்கள் முடிவெடுக்க 10 நாட்கள் அவகாசம் கேட்டது தேர்தல் ஆணையம். இதற்கு டெல்லி உயர்நீதிமன்றமும் அனுமதி வழங்கியது.
அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கூடாது; அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவி காலியாகவே இல்லை என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஒரு மனு தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் இன்று டெல்லியில் கூடி அதிமுக விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவுகள், டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட உள்ளது. தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை 2022 ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவின் தீர்மானங்களை தொடர்ச்சியாக ஏற்க மறுத்து வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் போது உச்சநீதிமன்றம் தலையிட்டதன் அடிப்படையில் அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இவ்வழக்கில் புதிய திருப்பமாக எடப்பாடி பழனிசாமி தரப்பும் நேற்று தேர்தல் ஆணையத்தில் ஒரு மனுவைக் கொடுத்தது. அதில், கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 10-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக அன்பரசு அறிவிக்கப்பட்டுள்ளார். கர்நாடகா தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை நிறைவடைய உள்ளது. இதனால் அதிமுகவின் பொதுச்செயலாளராக தம்மை அங்கீகரித்து உடனே முடிவையும் அறிவிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு மனுவில் தெரிவித்திருந்தது.
இத்தனைக்கும் கர்நாடகாவில் பாஜகவின் கூட்டணியில் போட்டியிட அதிமுக திட்டமிட்டிருந்தது. ஆனால் இன்று திடீரென வேட்பாளரை அறிவித்தது. அத்துடன் உடனடியாக தேர்தல் ஆணையத்தையும் அணுகி இன்றே முடிவை அறிவிக்க வேண்டும் என கோரியது எடப்பாடி தரப்பு. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் மனு மீது தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது.
இறுதியாக, அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் - அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. அதாவது ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களையும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளையும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்திருப்பதால் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னமும் கிடைத்துள்ளது. கர்நாடகா மாநிலம் புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அன்பரசன், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு ஓ.பன்னீர்செல்வத்துக்கு மிகப் பெரும் பின்னடைவாகும்.
-
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்.. பாஜக வாக்குறுதியை சொல்லி வாக்கு சேகரித்த ராஜன் செல்லப்பா! -
தொகுதி மறுவரையறை! சண்டை செய்யும் திமுக.. வேடிக்கை பார்க்கும் அதிமுக! என்னதான் பிரச்சனை? -
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
பச்சைத் துண்டு எடப்பாடி பழனிசாமி ஒரே போடு.. நிலமே இல்லாமல் விவாதமாகும் அசையா சொத்து விவரம் -
Election Exclusive: வாயில் வாஸ்து சரியில்ல.. ஜெயிச்சாலும் திண்டுக்கல் சீனிவாசனுக்கு சிக்கல்! திமுக போடும் பலே ப்ளான்? -
அசைக்க முடியாத அதிமுகவின் எஃகு கோட்டை..50 ஆண்டுகளாக திமுக வெல்லாத நிலக்கோட்டை! மல்லிகை ஊர் யாருக்கு? -
உங்களுக்கு இன்னும் பூத் சிலிப் வரலையா? வெறும் 2 நிமிடத்தில் டவுன்லோடு செய்யலாம்.. எப்படி? -
ஜெயலலிதா இருந்தவரை வாலை சுருட்டி இருந்தாங்க.. நான் இருந்திருந்தால்.. கண் சிவந்த சசிகலா -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல்












Click it and Unblock the Notifications