Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலவசத்தை எதிர்க்கும் பிரதமர்! கட்டுப்பாடுகளுடன் வரும் தேர்தல் ஆணையம்! வாக்குறுதியை அள்ளிவிட முடியாது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளிவிட்டு வரும் நிலையில், தேர்தல் ஆணையம் இதில் முக்கிய உத்தரவைப் பிறப்பித்து உள்ளது.

தேர்தல்களில் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்பதே அனைத்து கட்சிகளின் விருப்பமாகும். இதற்காக அரசியல் கட்சிகள் தங்களால் முடிந்த அத்தனை விஷயங்களையும் செய்வார்கள்.

குறிப்பாக ஒவ்வொரு சமயமும் தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் ஏகப்பட்ட வாக்குறுதிகளை அள்ளிவிடும். சில சமயங்களில் வெற்றி தோல்வியைக் கூட தேர்தல் அறிக்கை தீர்மானித்து உள்ளன.

வாக்குறுதி

வாக்குறுதி

ஆனால், இப்போதெல்லாம் தேர்தல் வாக்குறுதிகள் என்பது இஷ்டத்திற்கு இருப்பதாகவும் அனைத்து அரசியல் கட்சிகளும் வாக்குறுதிகள் அள்ளிவிட்டு வருவதாகவும் ஒரு தரப்பினர் குற்றஞ்சாட்டுகின்றனர். தேர்தல் வெற்றியை மட்டுமே அரசியல் கட்சிகள் இலக்காக வைத்துச் செயல்படுவதால் சில சமயங்களில் நிறைவேற்றவே முடியாத வாக்குறுதிகளை எல்லாம் தருவதாக விமர்சனம் எழுந்து உள்ளது.

 தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம்

ஏற்கனவே இலவசங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையே தேர்தல் வாக்குறுதிகளை அள்ளிவிடுவது மட்டுமின்றி, அரசியல் கட்சிகள் இந்தத் திட்டங்களுக்கு எப்படி நிதியளிக்கப் போகிறார்கள் என்பது குறித்த விவரங்களையும் கூற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. இது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கடிதமும் எழுதி உள்ளதாகக் கூறப்படுகிறது.

 கடிதம்

கடிதம்

தேர்தல் சமயங்களில் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும்போது ஏற்படும் பொருளாதார பாதிப்பு, அதை நிறைவேற்றத் தேவையான நிதியை அளிக்கும் திட்டம் குறித்துக் கேட்கத் திட்டமிட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்குக் கடிதம் எழுதியுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் தொடர்பாக அக்டோபர் 19ஆம் தேதிக்குள் கட்சிகள் பதில் அளிக்கலாம். நிறைவேற்றக் கூடிய வாக்குறுதிகளை அளித்து மட்டுமே மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தனது கடிதத்தில் கூறியுள்ளது.

 நிதி ஆதாரம்

நிதி ஆதாரம்

இது தொடர்பாக எழுதியுள்ள கடிதத்தில், "தேர்தல் அறிக்கைகளை உருவாக்குவது என்பது அரசியல் கட்சிகளின் உரிமை என்பதை ஒப்புக் கொள்கிறோம். அதேநேரம் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்தவும் அனைத்து கட்சிகளுக்கும் சமமான வாய்ப்பை வழங்கவும் வேண்டி உள்ளதால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் அளிப்பதைக் கண்காணிக்க வேண்டியது அவசியமாகிறது.

 தேவையான தகவல்கள்

தேவையான தகவல்கள்

எனவே, தேர்தல் சமயத்தில் அரசியல் கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகளுக்கு எங்கிருந்து நிதி வரும் என்பதைக் கட்சிகளும் அரசியல் தலைவர்களும் விவரிக்க வேண்டும் என்ற விதியை கொண்டு வர ஆலோசிக்கிறோம். பல நேரங்களில் அரசியல் கட்சிகள் மக்கள் தெளிவான தேர்வைச் செய்யத் தேவையான தகவல்களை வழங்குவதில்லை" என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

 அரசியல் கட்சிகள்

அரசியல் கட்சிகள்


அனைத்து அரசியல் கட்சிகளும் தாங்கள் அளிக்கும் வாக்குறுதிகள், தேர்தல் அறிக்கைகளில் உள்ள திட்டங்களுக்கான நிதி ஆதாரங்களைக் குறிப்பிட வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. அப்படி அறிவிக்கும் திட்டங்களுக்கான நிதி ஆதாரம் குறித்து கட்சிகளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்றால், இந்த விஷயத்தில் கட்சிக்குக் குறிப்பிட்டுச் சொல்ல எதுவும் இல்லை என்றே கருதப்படும் எனத் தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி இலவசங்களைத் தொடர்ந்து எதிர்த்துப் பேசி வருகிறார். இலவசங்கள் காரணமாகவே நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டு வருகிறார். சமீபத்தில் இது தொடர்பாகப் பல நிகழ்வுகளில் பிரதமர் மோடி விரிவாகப் பேசி இருந்தார். இந்தச் சூழலில் தேர்தல் ஆணையம் இப்படியொரு கட்டுப்பாட்டைக் கொண்டு வர முடிவு செய்து உள்ளது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. அதேபோல தேர்தல் நடத்தை விதிகளை முன் கூட்டியே அமல்படுத்துவது தொடர்பாகவும் தேர்தல் ஆணையம் விதிகளை மாற்ற உள்ளதாகத் தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+