நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்னுக்கு SIR நோட்டீஸ்! இருப்பை நிரூபிக்க வேண்டுமாம்! குவியும் கண்டனம்
டெல்லி: இந்தியாவுக்காக நோபல் பரிசு வென்ற, புகழ் பெற்ற பொருளாதார ஆய்வாளரான அமர்த்தியா சென் உள்ளிட்டோருக்கு, தங்கள் இருப்பை நிரூபிக்க வலியுறுத்தி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனங்கள் எழுந்திருக்கின்றன. கண்டனத்தையடுத்து, விசாரணை அவரது வீட்டில் மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எந்த மாநிலங்களில் எல்லாம் தேர்தல் நடைபெற இருக்கிறதோ, அங்கு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கையை (SIR) தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பீகாரில் தேர்தலுக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட SIRல் லட்சக்கணக்கான வாக்காளர்கள் விடுபட்டதாக விமர்சனங்கள் கிளம்பின.

SIR நடவடிக்கை
இதனையடுத்து தற்போது தமிழ்நாடு, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் என பல மாநிலங்களில் இந்த SIR பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மேற்கு வங்கத்தில், அமர்த்தியா சென், கிரிக்கெட் வீரர் முகமது ஷமி உள்ளிட்டோருக்கு, தங்கள் இருப்பை நிரூபிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் நோட்டீஸ் கொடுத்திருக்கிறது.
ஏன் நோட்டீஸ்?
அமர்த்தியா சென்னின் தாயாருக்கும் அவருக்கும் இடையிலான வயது வித்தியாசம் 15 ஆண்டுகளுக்கும் குறைவாக இருந்ததால், கணக்கெடுப்புப் படிவத்தின் அடிப்படையில், இந்த விசாரணை அறிவிப்பு அனுப்பப்பட்டதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியுள்ளனர். "தேர்தல் ஆணையத்தின் பார்வையில் அனைத்து வாக்காளர்களும் சமமானவர்கள். இதை தெளிவுபடுத்த வேண்டியது அவசியம், அதனால்தான் அறிவிப்பு அனுப்பப்பட்டது" என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆவணங்கள் வேண்டும்
வாக்குச்சாவடி நிலை அதிகாரி மற்றும் பிற தேர்தல் ஆணைய அதிகாரிகள், விசாரணை நோட்டீஸை அமர்த்தியா சென்னின் வீட்டிற்கே சென்று வழங்கினர். தற்போது வெளிநாட்டில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியரான அமர்த்தியா சென்னின் விசாரணை, ஜனவரி 16 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. வாக்காளர் பட்டியலில் அவரது பெயரைத் தக்கவைக்க, தேர்தல் ஆணையத்தால் பட்டியலிடப்பட்ட ஆவணங்களை அவர் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அவை பரிசீலனைக்கு அனுப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
குவியும் கண்டனம்
இந்த விவகாரம் மேற்கு வங்காள அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸின் தேசிய பொதுச்செயலாளர், அபிஷேக் பானர்ஜி, ராம்பூர்ஹாட்டில் நடந்த பேரணியில் பேசுகையில், "அமர்த்தியா சென்னுக்கு விசாரணை அறிவிப்பு அனுப்பப்பட்டது என்பதை அறிந்தேன். அவர் நோபல் பரிசு பெற்றவர். இந்தியாவின் அறிவு மற்றும் விழுமியங்களை உலக அரங்கில் கொண்டு சென்றவர். ஆனாலும் இன்று, அவரது கவுரவம் பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ள தேர்தல் ஆணையத்தால் அவமானப்படுத்தப்படுகிறது" என விமர்சித்திருக்கிறார்.
பாஜக விளக்கம்
பாஜக சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி இதற்கு பதிலளிக்கையில், "சில முரண்பாடுகள் இருந்திருக்கலாம். தேர்தல் ஆணையம் அவருக்கு தேவையில்லாமல் அறிவிப்பு அனுப்பாது. அவர் ஒத்துழைக்க வேண்டும். அவருக்கு 90 வயதுக்கு மேல் ஆகிறது. 85 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கான விதிகள் தேர்தல் ஆணையத்திடம் உள்ளன. 80 வயதுக்கு மேற்பட்ட முன்னாள் அமைச்சர் காந்தி கங்குலியின் விசாரணை அவரது வீட்டிலேயே நடத்தப்பட்டது. சென் தனது வீட்டிற்கே BLO அதிகாரியை அழைக்கலாம்" என்று கூறியுள்ளது.
சிறப்புத் தீவிர மறுசீரமைப்பின் முதல் கட்டத்திற்குப் பிறகு, டிசம்பர் 16 அன்று வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில் 58 லட்சத்திற்கும் அதிகமான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதனால் மேற்கு வங்கத்தின் வாக்காளர்களின் எண்ணிக்கை 7.66 கோடியிலிருந்து 7.08 கோடியாக குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications