Election Commission: வாக்கு திருட்டு புகார்.. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கனும்! தேர்தல் ஆணையம் பிடிவாதம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: போலி வாக்காளர்கள் மூலம் வாக்கு திருட்டு நடந்திருப்பதாகவும், மத்திய பாஜக அரசு உடன் தேர்தல் ஆணையம் கூட்டு சேர்ந்து இதை செய்திருப்பதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

ராகுல் காந்தி முன் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் சாதாரணமானவை கிடையாது. கடந்த 2024 மக்களவை தேர்தல் தொடங்கி பல்வேறு மாநில தேர்தலில் தேர்தல் ஆணையம் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதாக குற்றம்சாட்டிய ராகுல், அதற்கான ஆதரங்களாக சில தரவுகளையும் வெளியிட்டார். இதுதான் தேசிய அரசியலில் பெரும் சலசலப்பை கிளப்பியிருக்கிறது.

Election Commission Rahul Gandhi BJP

வாக்கு திருட்டு நடைபெறுவதாக 5 விஷயங்கள் மூலம் ராகுல் காந்தி சந்தேகத்திருக்கிறார். முதல் விஷயம் போலி வாக்காளர்கள், இரண்டாவது போலி முகவரி, மூன்றாவது விஷயம் ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள், நான்காவது தவறான புகைப்படங்கள், இறுதியாக படிவம் 6 தவறாக பயன்படுத்தப்பட்டு இருப்பது, என 5 வகைகளில் வாக்கு திருட்டுகள் நடைபெற்றிருக்கிறது என்று ராகுல் காந்தி சந்தேகிக்கிறார்.

கர்நாடகாவின் பெங்களூர் மத்திய மக்களவைத் தொகுதியில் மட்டும் சுமார் ஒரு லட்சத்து 250 வாக்குகள் திருடப்பட்டுள்ளன என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்த தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள சுமார் 40,009 வாக்காளர்களின் முகவரிகள் போலியானவையாக இருப்பதாக ஆதாரங்களை ராகுல் காந்தி முன் வைத்திருக்கிறார்.

தேர்தல் ஆணையம் பாஜக தலைமை அலுவலகம் போல செயல்படுகிறது என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனங்களை அடுக்கி வருகின்றன. தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் தொடங்கி, இந்த மோசடி நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருக்கும் நிலையில், ராகுல் காந்தியின் விமர்சனம் மிகுந்த கவனம் பெற்று இருக்கிறது.

இந்த விமர்சனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், ராகுல் காந்தி இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது தன்னுடைய குற்றச்சாட்டுகள் போலியானவை தவறானவை என்று சொல்லி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. ஏற்கெனவே இவ்வாறு கூறியிருந்த நிலையில் தற்போது மீண்டும் இதே கருத்தை தெரிவித்தருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+