காங்கிரஸ் கட்சியின் தலைவர் யார்? அக்.17ல் உட்கட்சி தேர்தல்.. செயற்குழு கூட்டத்தில் முக்கிய முடிவு!
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கும் உட்கட்சித் தேர்தல் வரும் அக்.17ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சிதலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். பின்னர் புதிய முழு நேர தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியாமல் காங்கிரஸ் கட்சி திணறிக் கொண்டிருக்கிறது. இதனை சரி செய்ய கோரி அக்கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தினர்.
ஆனால் காங்கிரஸ் மேலிடம் இதில் பெரியளவில் ஈடுபாடு காட்டவில்லை. இதனால் தான் 23 மூத்த தலைவர்கள் ஒருங்கிணைந்து கட்சித் தலைமைக்கு கடிதம் எழுதிப் பார்த்தனர். இருந்தும் எவ்வித மாற்றமும் பெரிய அளவில் நடக்கவில்லை.

மூத்த தலைவர்கள் வெளியேற்றம்
இதனால் காங்கிரஸ் மேலிடத்தின் மீது அதிருப்தியை வெளிப்படுத்தி ஒவ்வொரு தலைவராக வெளியேறி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், காங்கிரஸ் கட்சியில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்தார். இது அந்தக் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டு
அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியின் சரிவுக்கு காரணம் ராகுல் காந்திதான் என குலாம்நபி ஆசாத் பகிரங்க கடிதம் எழுதி வெளியிட்டார். குலாம் நபி ஆசாத்தைத் தொடர்ந்து தெலுங்கானா மூத்த தலைவர் எம்.ஏ.கான் நேற்று காங்கிரஸில் இருந்து வெளியேறிவிட்டார். அவரும் ராகுல் காந்தி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இவர்களைத் தொடர்ந்து மேலும் பல மூத்த தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து அலை அலையாக வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

செயற்குழு கூட்டம்
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்று வருகிறது. தற்போது சோனியா காந்தி மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ளார். அவருடன் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் சென்றுள்ளனர். அனைவரும் வீடியோ மூலம் செயற்கு குழு கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

உட்கட்சி தேர்தல்
அந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலை அக்.17ம் தேதி நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உட்கட்சித் தேர்தலுக்கான அறிவிப்பாணை வரும் செப்.22ம் தேதியும், செப். 24 வேட்புமனு தாக்கல் என்றும், வேட்புமனு தாக்கல் செய்ய செப்.30ம் தேதி கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அக்.17ம் தேதி வாக்குப்பதிவும், வாக்கு எண்ணிக்கை அக்.19ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா?












Click it and Unblock the Notifications