தெலுங்கானாவுக்கு "ஸ்பெஷல் மெசேஜ்.." 4 மாநில தேர்தல் முடிவு குறித்து பிரதமர் மோடி சொன்னது இதுதான்
டெல்லி: 3 மாநிலங்களில் பாஜகவிற்கு மக்கள் வழங்கியுள்ள இந்த அசாதாரண ஆதரவிற்கு நன்றி. மக்கள் நலனிற்காக தொடர்ந்து அயராது பணியாற்றுவோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
வரும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கு முன்னோட்டமாக அரையிறுதி என்று வர்ணிக்கப்பட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் நடைபெற்று முடிந்தது. இதில் மிசோரம் தவிர்த்து மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், தெலுங்கானா ஆகிய மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜகவும், காங்கிரசும் நேரடியாக மல்லுக்கட்டின. தெலுங்கானாவில் இந்த 2 தேசிய கட்சிகளுடன் பாரதிய ராஷ்டிர சமிதியும் சேர்ந்ததால் மும்முனை போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கி முன்னிலை நிலவரங்களின் படி சத்தீஷ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடிக்கிறது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்க வைக்க உள்ளது.
மக்கள் துணை நிற்கின்றனர்: தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது. தெலுங்கானாவில் பெரிய அளவில் வெற்றி கிடைக்காவிட்டாலும் பிற மூன்று மாநிலங்களில் வெற்றியை பெற்று இருப்பது பாஜகவுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் ஹேப்பி மோடில் உள்ளனர். இந்த நிலையில் தேர்தல் முடிவு குறித்து பிரதமர் மோடி கூறியதாவது:- நல்ல நிர்வாகம், வளர்ச்சி அரசியலுடன் மக்கள் உறுதியாக துணை நிற்கின்றனர் என்பதை சத்தீஷ்கர், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
இந்த 3 மாநிலங்களில் பாஜகவிற்கு மக்கள் வழங்கியுள்ள இந்த அசாதாரண ஆதரவிற்கு நன்றி. மக்கள் நலனிற்காக தொடர்ந்து அயராது பணியாற்றுவோம். பாஜக நிர்வாகிகளுக்கு எனது நன்றிகள். அவர்களது பணி ஈடு இணையற்றது. பாஜகவின் வளர்ச்சி அஜெண்டாவில் மக்கள் மத்தியில் அயராது கொண்டு சென்றவர்கள் இவர்கள் தான் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தெலுங்கானாவுக்கு நன்றி: இதேபோல் தெலுங்கானா மாநில தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பாஜகவுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். அவர் கூறுகையில், "தெலுங்கானா மாநில சகோத சகோதரிகளே.. பாஜகவுக்கு வழங்கியுள்ள ஆதரவிற்கு நன்றி. கடந்த சில ஆண்டுகளாகவே பாஜகவின் மீது தெலுங்கானா மக்கள் காட்டும் ஆதரவு அதிகரித்து வருகிறது.
தற்போது நடந்த தேர்தல் முடிவும் இதனையே காட்டுகிறது. தெலுங்கானா மக்களுடைய பிணைப்பு பிரிக்க முடியாதது. தெலுங்கானா மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்!












Click it and Unblock the Notifications